கொரோனை தாண்டி டெங்கு, மலேரியா போன்ற நோய்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை!

கொரோனை தாண்டி டெங்கு, மலேரியா போன்ற நோய்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை!

சர்வதேச அளவில் சகல நாடுகளையும் அச்சுறுத்தி முடக்கி போட்டு பாய்ச்சல் காட்டும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் குணமடைந் தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் குறித்து முன்னாள் விஞ்ஞானியும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை துணைத் தலைவரான டாக்டர் டி மாரியப்பன் விவரிக்கையில், “தெற்காசிய மக்களுக்கு மரபணு ரீதியாகவும் அவர்களின் உணவு முறையாலும் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றல் இயற்கையாகவே உள்ளது. தெற்காசிய மக்கள் கொசுக் களால் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்களை காலங்காலமாக எதிர் கொண்டு வருவதால் அவர்களது மரபணுக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை இயற்கையாகவே வளர்த்துக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை விட இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்படு வதற்கு வாய்ப்புகள் குறைவு. அதேபோல் பாதிப்பிலிருந்து குணமாவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கடந்த 2003ம் ஆண்டு கொரோனா வைரஸ் பிரிவை சேர்ந்த கொடிய சார்ஸ் வைரஸ் (SARS )உலகின் பல நாடுகளை கடுமையாக பாதித்த போது இந்தியாவில் அதன் தாக்கம் சிறிதுமில்லை. இந்தியாவில் ஒருவர் கூட சார்ஸ் நோயால் பாதிக்கப்படவில்லை.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இந்தியர்களுக்கு அதிகமாக இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அவர்களின் பாரம்பரிய உணவு முறை. குறிப்பாக தென்னிந்தியாவில் இந்தியர்கள் வழக்கமாக சாப்பிடும் ரசத்தில் பூண்டு, மிளகு போன்ற மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை அதிகம் சேர்ப்பதால் மக்களுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் (anti oxidents) கிடைக்கிறது அவர்களது நுரையீரலும் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தான் கரோனா வைரஸின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு மிகக் குறைவு.

தற்போது இந்தியர்கள் கொரோனா வைரஸ் உடன் போராடிக் கொண்டிருந்தாலும் பருவமழை துவங்கிய உடன் ஆண்டுதோறும் நாம் எதிர்கொள்ளும் டெங்கு, மலேரியா போன்ற நோய் களையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். அதற்காக மக்களும் அரசாங்கங் களும் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்” என டாக்டர் டி மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!