பாகிஸ்தான் ;குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து -பலர் பலி!.

பாகிஸ்தான் ;குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து -பலர் பலி!.

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த விபத்து குறித்து தெரிவித்து உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிஐஏ வின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்புக் குழுவினருடன் தொடர்பில் இருக்கிறேன். விபத்து தொடர்பான விசாரணை உடனடியாக தொடங்கப்படும். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் இருந்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கராச்சிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் கராச்சி அருகே சென்றபோது தீடீரென அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விமானத்தில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உட்பட 108 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் விரைவாக தரையிறங்க வேண்டும் என்றும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விமானி, விமான நிலையத்தை சுற்றி வந்து தரையிறங்க முயற்சித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Related Posts

error: Content is protected !!