வயசுக்கு வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செஞ்சுக்காமலே சேர்ந்து வாழலாம்! – சுப்ரீம் கோர்ட்

வயசுக்கு வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செஞ்சுக்காமலே சேர்ந்து வாழலாம்! – சுப்ரீம் கோர்ட்

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. இதை சட்டம் இயற்றும் சபைகளும் அங்கீகரித்துள்ளன. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில் இதுபற்றிய சட்டப்பிரிவு இடம்பெற்றுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது

கேரளாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் துசாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவில் ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், துசாராவுக்கு 18 வயது நிரம்பி இருந்தது. ஆனால், நந்தகுமாருக்கு 21 வயது நிரம்பவில்லை. எனவே, இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று துசாராவின் தந்தை கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கோர்ட் அந்த திருமணத்தை ரத்து செய்தது. ஆனாலும், அவர்கள் இருவரும் கணவன்- மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். உடனே தனது மகளை நந்த குமாரிடம் இருந்து பிரித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூ‌ஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் துஷாரா, திருமண வயதான, 18ஐ கடந்து, 20 வயது பெண்ணாக உள்ளார். அவர், தனக்கு பிடித்தவருடன் வாழ்க்கை நடத்த, முழு சுதந்திரம் உள்ளது. அந்த ஆணுக்கு, 21 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. குடும்ப வன்முறை சட்டத்தில், பெண்களை பாதுகாக்கும் ஷரத்தில், தனக்கு பிடித்த, வயதுக்கு வந்த ஆணுடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வயதுக்கு வந்த ஆண், பெண், திருமண வயது அடையாத பட்சத்தில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது. வயது வந்தோர், தங்களின் விருப்பங்களை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளவர்கள். இந்த சந்தர்ப்பத்தில், பெற்றோர் வேலையை, நீதிமன்றம் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. என்று தீர்ப்பு கூறினார்கள்.

Related Posts

error: Content is protected !!