தஞ்சை பெரிய கோயில் : நந்தியம்பெருமானுக்கு அலங்காரம்- வீடியோ!i

தமிழர்களின் மிகப்பெரிய களஞ்சியமாகத் தஞ்சை பெரிய கோயில் விளங்கி வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகிறது. இந்த தஞ்சாவூர் பெரியகோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.15) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களாக கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
இந்த கோயிலில் இருக்கும் நந்தியம்பெருமான் சிலை மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட இந்த நந்தியம்பெருமான் 20 டன் எடை கொண்டதாகும். இந்த நந்தி பெருமானுக்கு ஆண்டுதோறும் வரும் மாட்டுப் பொங்கல் அன்று விழா நடத்தப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து, மாட்டு பொங்கலான இன்று (ஜன.16) அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு என பலவகையான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் மலர்கள் என 2 டன் எடையில் பொருட்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு முன்பாக, 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜைகள் நடைபெற்றது.அந்த பசுமாடுகளுக்குச் சந்தனம், குங்குமம் பூசப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பட்டுத் துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டது. அதேசமயம் பசு மாட்டின் உரிமையாளர்களுக்கும் பட்டுத் துண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது
பிறகு, நந்தியம் பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர் சுவாமி தரிசனம் செய்தனர்.