டாஸ்மாக் சரக்குகள் திடீர் விலை உயர்வு! – எந்த பிராண்டுக்கு எவ்வளவு அதிகரிப்பு? – முழு விபரம்!

டாஸ்மாக் சரக்குகள் திடீர் விலை உயர்வு! – எந்த பிராண்டுக்கு எவ்வளவு அதிகரிப்பு? – முழு விபரம்!

மிழகத்தில் அண்மையில் ஆவினில் தயிர் உள்ளிட்டவை விலை அதிகரித்தையே இன்னும் மக்கள் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் சூழலில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களில் விலை ரூ. 10 முதல் ரூ. 80 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பழைய நேரப்படி விற்பனை நடைபெறுகிறது. தமிழக அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மது விற்பனை மூலமே கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. குவாட்டருக்கு ரூ.10, புல்லுக்கு ரூ.40 விலை உயர்ந்தது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று முதல் திங்கட்கிழமை டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்ந்த பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மதுவகைகள் மூலம் ரூ 10.35கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. பீர் வகைகள் மூலம் ஒரு நாளைக்கு 1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4396 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

அதே சமயம் இப்படி டாஸ்மாக் மது விலை உயர்வதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் வருமானம் குறைந்துள்ள நிலையில், மது விலை உயர்வு மேலும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!