ஜூலை 4 என்றாலே அமெரிக்க சுதந்திர தினம்!

ஜூலை 4 என்றாலே அமெரிக்க சுதந்திர தினம்!

ங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விடுதலையை பிரகடனப்படுத்திய நாள் 1776 ஜூலை 4. முன்னதாக ஜூலை 2ம் தேதி பதிமூன்று மாநிலங்களும் கூட்டாக விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றி னர். தாமஸ் ஜெஃபர்சன் ஐ தலைவராகக் கொண்ட ஐந்து பேர் குழு வரலாற்று சிறப்பு மிக்க இந்த பிரகடனத்தை எழுதினார்கள். ஆனால் இதில் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்து இரண்டு தடவை தாக்குதல் நடத்தியுள்ளது. 1800 களின் முற்பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில் தலை நகரத்தை கைப்பற்றியும் உள்ளார்கள். மற்றொரு தாக்குதலில் தலைமைச் செயலகத்தை தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள்.

இத்தனைக்கும் அமெரிக்கா என்பது ஐரோப்பா முழுவதிலிருந்தும் வந்து குடியேறியவர்களால் உருவான நாடுதான் என்றாலும் இன்றைய தினத்தை அங்குள்ள நண்பர்கள் உறவினர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். சிறு நகரம் முதல் பெரிய நகரம் வரை சிறப்பு ஊர்வலம், வாண வேடிக்கை என அமெரிக்காவே வண்ணமயமாக மாறிவிட்டது.

சில நகரங்களின் வாணவேடிக்கையை பார்ப்பதற்காக விமானங்கள் மூலம் வெளியூர் வாசிகள் வருவதும் உண்டு. மக்களும் அன்றைய தினம் பட்டாசுகளை வாங்கி தங்கள் பகுதிகளில் கொளுத்தி கொண்டாடுகிறார்கள்.

ஸ்பெஷல் துணுக்கு :

ஆரம்பத்தில் அமெரிக்க சுதந்திர தினம் என்று அழைக்கப்பட்டது மாறி தற்போது ‘ஜூலை 4’ என்றாகிவிட்டது. ஜூலை 4 என்றாலே அமெரிக்க சுதந்திர தினம் என்று அர்த்தம் என கூகுளும் குறிப்பிடுகிறதாக்கும்

Related Posts

error: Content is protected !!