கருணாநிதிக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸாகுதுங்கறோம்!

கருணாநிதிக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸாகுதுங்கறோம்!

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. *இவர்கள் தவிர, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள, வி.வி.ஐ.பி., உள்ளிட்ட தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. *இசட் பிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு, 36 வீரர்களும், இசட் பிரிவில் உள்ளவர்களுக்கு, 22 வீரர்களும் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவர்.

karuna june 23

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், டில்லி போலீசார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள், பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படுவர். இசட் பிரிவு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ள வீரர்களுக்கு நவீனரக துப்பாக்கி, தகவல் தொடர்பு கருவிகள் ஆகியவை வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு வீரரும், ஆயுதமே இல்லாமல் அச்சுறுத்தலையும், எதிரிகளையும் சமாளிக்கும் பயிற்சி பெற்றவர்களாக இருப்பர்.

இதன் ஐப்படையில் இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது, அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல் அடிப்படையிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது ஒரு அடையாளமாக அல்லது அந்தஸ்தாகச் மாறி விட்டது. முன்னர் பாதுகாப்பை திரும்ப பெற முயற்சி நடந்த போது, எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் சில நாட்களுக்கு அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் கருணாநிதி, அகிலேஷ், லாலு மற்றும் தருண் கோகாய் ஆகியோருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வாபஸ்பெறுவது குறித்து உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த பட்டியலில் பிகே மகந்தா, பரூக் அப்துல்லா மற்றும் சத்தீஸ்கர் ராமன் சிங்கும் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவு ராஜ்நாத் சிங்கிடம் விடப்பட்டுள்ளதாகவும், அவர் ஒப்புதல் கிடைத்ததும் பாதுகாப்பு திரும்ப பெறப்படும் எனத் தெரிவித்தனர்

error: Content is protected !!