மத்திய புலனாய்வு பிரிவில் 995 பணியிட வாய்ப்பு!

மத்திய புலனாய்வு பிரிவில் 995 பணியிட வாய்ப்பு!

த்திய உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவில், மத்திய புலனாய்வு அலுவலரின் உதவியாளர் (ஏசிஐஓ) பணியிடத்துக்கு ஆள்களை தேர்வு செய்யும் அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஏசிஐஓ, கிரேடு – 2/செயலர் உள்ளிட்ட பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 995 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.550 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் இதர விவரங்கள் https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி, தகுதியின் அடிப்படையில் கவனமாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

வரும் 15ம் தேதி விண்ணபிக்க கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!