2000 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள லூலூ மால்!- கேரள முதல்வர் திறந்து வைத்தார்!

2000 கோடி ரூபாய்  முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள லூலூ மால்!- கேரள முதல்வர் திறந்து வைத்தார்!

திருவனந்தபுரம் – கழக்கூட்டம் பைபாஸ் சாலையில் டெக்னோபார்க எதிரில் உருவாகியுள்ள வணிக வளாகம் உலகம் முழுவதும் இயங்கும் 200க்கும் அதிகமான லூலூ மால்களை விட பல புதுமைகளை கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு பிரத்யேகமான 450 ரைடுகளுடன் கூடிய Children’s Park, சுமார் 80ஆயிரம் சதுர அடியில் Family Park, பெண்கள் முதியவர்கள் என்று தனித்தனியாக குதித்து குதூகலமாக பொழுதை கழிக்கும் வகையில் பிரமாண்ட Trampoline Park திருவனந்தபுரம் லூலூ மாலின் சிறப்பம்சங்களில் ஒன்று..!

மொத்தம் 2.5 லட்சம் சதுர அடியில் உருவாகியுள்ள தரைத்தளம் போக மீதமுள்ள இரண்டு மாடி முழுவதும் உலகத்தரம் வாய்ந்த 300 பிரபல நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் ஷோரூம் அமைத்துள்ளனர்.  அதிலும் 10 ரெடிமேட் நிறுவனங்கள் கேரளாவில் முதல் முறையாக லூலூ மாலில் கிளை துவங்கி இருக்கின்றனர்.

உலகின் எல்லாவிதமான, எல்லா நாடுகளின் சுவையுடன் கூடிய தனித்தனி கவுண்டர்களுடன் கூடிய பிரம்மாண்டமான ஃபுட் கோர்ட் நவீன வடிவமைப்பில் உள்ளது.. ஒரே நேரத்தில் 2500 பேர் அமர்ந்து உணவு ஆர்டர் செய்து சமாதானமாக உணவருந்தி செல்ல முடியும்.. திருவனந்தபுரம் லூலூ மாலில் 12 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் சினிமா ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.. ஒரே நேரத்தில் 3800 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான மல்டி லெவல் பார்க்கிங் வசதிகள் கொண்ட இந்த மாலில், தனி வளாகத்தில் இரண்டு லட்சம் சதுர அடியில் உருவாகியுள்ள தென்னிந்தியாவில் மிகப்பெரிய லூலூ ஹைப்பர் மார்க்கெட் மிகப்பெரிய வியப்பு..

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருவனந்தபுரம் லூலூ மாலில்  “கண்காட்சி மற்றும் விற்பனையகம்” தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறும் யூசுப் அலி, உள்நாட்டின் சிறிய விவசாயிகளை ஊக்கப்படுத்தி அதன் மூலம் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்றும் யூசுப் அலி குறிப்பிட்டுள்ளார்..!

திருவனந்தபுரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டு வரியாக 3.5 கோடி ரூபாய் செலுத்தியதின் மூலம் கேரளாவின் அதிகளவில் கட்டட வரி செலுத்தும் நிறுவனம் எனும் தகுதியும் திருவனந்தபுரம் லூலூ மால் பெறுகிறது..!

அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் லூலூ மால் வளாகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த யூசுப் அலி, தனது புதிய நிறுவனம் மூலம் பத்தாயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஐயாயிரம் பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பு மூலம் பயனடைவர் என்று பெருமிதத்துடன் கூறினார்..

தேனீர் அருந்தாமல், பர்ச்சேஸ் எதுவும் செய்யாமல் இந்த வளாகம் முழுவதும் சுற்றிவர அரைநாள் ஆகும் என்றும், பூங்காக்களில் பொழுது போக்கி, விதவிதமான உணவருந்தி, ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு முழு நாள் இன்ப சுற்றுலா போல கழியும் என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன..

error: Content is protected !!