கொல்லம் கொலைகார கணவருக்கு 4 ஆயுள் தண்டனை!

கொல்லம் கொலைகார கணவருக்கு 4 ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம் கொல்லம் அருகே, பாம்பை கடிக்கவிட்டு 25 வயது பெண் இறந்த வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரது கணவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேரடியாக சாட்சிகள் ஏதுமின்றி, அறிவியல்பூர்வமான தடயங்கள் மற்றும் சூழ்நிலைகளை மட்டுமே ஆராய்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனையடுத்து, இவர்கள் குடும்பத்துடன் அரூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இந்நிலையில், சிறிது மாதத்திலேயே உத்ராவை மீண்டும் விஷப்பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். உத்ரா உயிரிழப்பில் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து, மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையில் புகாரளித்தனர். உத்ராவின் கணவர் மீதான சந்தேகத்தில் அவரை விசாரித்ததில் சூரஜ் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். உத்ரா வீட்டாரிடம் இருந்து ஏற்கனவே, 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து, கார் பல கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கி கொண்டும் மேலும், வரதட்சணைக்காக மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சமீபத்தில் இது தொடர்பாக 100 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சூரஜ் குற்றவாளி என்று கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இதற்கான தண்டனை விவரத்தை கொல்லம் நீதிமன்றம் இன்று அறிவித்தது. மனைவியை பாம்பை ஏவி கொடூரமாக கொலை செய்த கணவன் சூரஜ்-க்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சூரஜூக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன் 4 ஆயுள் தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!