June 7, 2023

பாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம்! ஏன் தெரியுமா??,

லகில் இன்று மகா சிக்கலில் இருக்கும் நாடு பாகிஸ்தான், அவர்கள் நாட்டுக்குள் டைனசரே புகுந்துவிட்டது, அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல்களாலும் அதற்கு பெருகும் மக்கள் ஆதரவாலும் திகைத்து நிற்கின்றது பாகிஸ்தான் அரசு. அதாவது பாகிஸ்தான் தான் பெற்றெடுத்த பிள்ளை, உடன் பிறப்பு, ரத்தத்தின் ரத்தமான தாலிபனை வாழவைக்க கடும் முயற்சி எடுத்திருப்பது உலகறிந்தது தாலிபன்கள் ஆளவேண்டும் அதை மகிழ்வாய் தான் காணவேண்டும், ஆப்கனோ அதன் மக்களோ எப்படி போனாலும் தாலிபன்கள் மட்டும் வாழவேண்டும் என்பது அதன் கொள்கை, அப்பொழுதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது. இதனால்தான் உயிரை கொடுத்து மானத்தை இழந்து இன்னும் எது எதையெல்லாமோ இழந்து தாலிபனை ஆதரிக்கின்றார்கள். இன்று உலக நாடுகளிடையெல்லாம் “ஆதரிப்பீர் தாலிபனை. திருந்திவிட்ட சகோதரனை ஆதரிப்பீர்” என அது கிளம்பிவிட்டது.

அதே நேரம் உள்நாட்டில் அது எதிர்பாரா பின்விளைவுகள் ஏற்பட்டு விட்டன‌. பாகிஸ்தான் தாலிபன்கள் இதை மக்களிடம் கொண்டு சென்றுவிட்டார்கள், அதாவது ஆப்கனில் தூய ஷரியத் இஸ்லாமிய ஆட்சியினை அங்கிகரிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிய இஸ்லாமிய அமீரகத்தை அங்கீகரிக்கும் பாகிஸ்தான் ஏன் தன் சொந்த நாட்டில் அதை அனுமதிக்கவில்லை என கிளம்பிவிட்டார்கள் “பாருங்கள் எமதருமை இஸ்லாமிய மக்களே, அடுத்த நாட்டில் நம் மார்க்கம் சொல்லும் வழியில் நடக்க பாடுபடுவார்களாம், ஆனால் சொந்த மக்கள் அதை பின்பற்ற விடவே மாட்டார்களாம். இந்த பாகிஸ்தான் எனும் தேசம் இஸ்லாமை காக்க உருவானது அல்லவா? இப்படி ஒரு ஆட்சி என்றால் இந்தியாவுடனே இருந்திருக்கலாமே? ஏன் பிரிந்தோம்? ஏன் ஆப்கன் காஷ்மீர் என போராடினோம்? இஸ்லாமை காத்து உங்களை எல்லாம் சுகவனம் புகவைப்பதற்கு அல்லவா? அங்கே நம் இஸ்லாமிய சொந்தங்கள் அமெரிக்காவினையே விரட்டி ஷரியத்தை அமைக்கும் பொழுது, இந்த காபீர் அடிமையான இம்ரான்கானை விரட்டி நாம் பாகிஸ்தான் அமீரகம் அமைக்க முடியாதா? ஆப்கானிய மக்கள் தூய ஷரியத்தில் வாழும்பொழுது நாம் அரைகுறை மார்க்கத்தில் வாழ்வதா? கிளம்பட்டும் படை, உடையட்டும் தடை, இம்ரான் மண்டையினை உடை” என கிளம்பிவிட்டார்கள்

சுமார் 40 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மேல் தாக்குதல் நடந்திருக்கின்றது, பலி அதிகரிக்கின்றது இதில் தீவிரவாதிகளை கண்டறிவதும் பாகிஸ்தானுக்கு சிரமம், காரணம் ஆப்கன் தாலிபன்கள் பாகிஸ்தானில் ஏராளம் உண்டு, அவர்களுக்குள் பாகிஸ்தான் தாலிபன்களும் உண்டு. பாகிஸ்தானிடம் இருந்து ஆப்கன் தாலிபன் உதவிபெறுவது என்பது உரிமை, ஆனால் பாகிஸ்தான் தாலிபன்களை பிடித்து கொடுக்காமல் காப்பது அவர்கள் கடமை. இதனால் மிகபெரிய சிக்கலில் சிக்கிவிட்டது பாகிஸ்தான். இந்தியாவின் எல்லையில் தொல்லை கொடுத்த பாகிஸ்தான் ராணுவம் இப்பொழுது சொந்த மக்களிடம் அடிவாங்கி கொண்டிருக்கின்றது, பாகிஸ்தானிய அணுகுண்டு பற்றி மேல்நாடுகள் அச்சம் தெரிவிக்கின்றன‌.அவை சீனதயாரிப்பு என்பதால் மட்டும் நம்பிக்கை கொள்ளமுடியாது என அவை கவலைபடுவதிலும் அர்த்தம் உண்டு.

எந்நிலையிலும் எதுவும் நடக்கலாம் எனும் அளவு நிலமை சிக்கலாகின்றது, பாகிஸ்தான் ராணுவத்தால் நிலமையினை கட்டுபடுத்த முடியவில்லை, அடிமேல் அடிவாங்கி கொண்டிருக்கின்றார்கள் . இம்ரானும், பாகிஸ்தான் உளவுதுறையும், ராணுவ தளபதியும் “அன்பர்களே நாமெல்லாம் காஷ்மீரை மீட்க கிளம்ப வேண்டிய படை, நாமெல்லாம் இப்படி மோதி கொண்டால் மோடி சிரிக்கமாட்டாரா, அமித்ஷா ஆர்பரிக்கமாட்டாரா, அஜித்தோவல் அதிரடியாய் புன்னகைக்க மாட்டாரா?” என கதறினாலும் யாரும் கேட்பதில்லை. பாகிஸ்தானில் ஆட்சிமாறி ஆப்கன் போல் குழம்பலாம், இல்லை ராணுவம் ஆட்சிக்கு வரலாம் இல்லை அந்நாடு இனி இரண்டாக உடையலாம் எனும் அளவு நிலமை மோசமாகி கொண்டிருக்கின்றது . விஷயம் மகா சீரியசாக சென்று கொண்டிருக்கின்றது, இம்ரான்கான் திடீரென நாட்டை விட்டு ஓடினாலும் ஆச்சரியமில்லை.

சரி, அவர் எந்த நாடுக்கு ஓடுவார்? சீனா நிச்சயம் இதற்கெல்லாம் இடமளிக்காது.. அதனால் அவரின் முன்னாள் கூட்டாளி, அதாவது முன்பு டிவிட்டரில் முக ஸ்டாலினின் குடியுரிமை போராட்ட எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த வகையில் அவருக்கு மு.க ஸ்டாலினை கொள்கை ரீதியாக‌ தெரியும், நல்ல புரிதல் உண்டு எனும் வகையில் அந்த ஸ்டாலினார் ஆளும் இந்திய மாநிலத்துக்கு மர்மமாக மாறுவேடத்தில் தப்பி வரலாம் என்பதால் தமிழக காவல்களை பலபடுத்துவது நல்லது

ஸ்டேன்லி ராஜன்