அனபெல் சேதுபதி விமர்சனம்!

நேத்திக்கு என்ன சாப்பிட்டே?

பிரியாணி

இன்னிக்கு என்ன சாப்பிட்டே?

பிரியாணி?

நாளைக்கு என்ன சாப்பிடுவே?

பிரியாணி.. என்று பதில் சொல்வோரின் நிலையில்தான் கோலிவுட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. கடந்த இரண்டு வாரத்தில் ரிலீஸான ஆறேழு படங்களில் பாதிக்கும் மேல் மாஸ்டர் செஃப் ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பில் உருவானதாகும்.. அப்படியான இவ்வாரப் பட்டியலில் இடம் பிடித்த வி.சே.-யின் அனபெல் சேதுபதி படத்தால் அப்செட் ஆனோர் லிஸ்ட் அதிகம்! காரணம் பேய் படமாக எடுக்க நினைத்திருந்தால் அதற்காக மர்ம முடிச்சுகள், திகில் சம்பவங்களை அமைத்து பயமுறுத்த முயன்றிருப்பார்கள். இல்லையில்லை இது காமெடி படம் என்றால், காண்போரை 7 கேட்ப்போரை மெய்மறந்து சிரிக்க வைக்கும் வசனங்களை உருவாக்க முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்திலோ பயம் என்ற காமெடியையும் காமெடி என்ற நினைப்பில் பயத்தையும் மிக்ஸ் செய்து நோகடித்து விட்டார்கள்!

பேய் & பேண்டசி படமாச்சே.. அதற்காக முன்னொரு காலத்தில் அதாவது 1940களில் ராஜாவா இருந்த விஜய் சேதுபதி தன் ஆசை ஃபாரீன் காதலி டாப்ஸிக்கு ஒரு பிரமாண்ட அரண்மனை கட்டுகிறார். அவ்வரண்மனை மீது ஆசைகொண்ட அதே காலக்கட்ட ஜமீந்தார் ஜகபதி பாபு விஜய் சேதுபதியிடமிருந்து அந்த அரண்மனையை கைப்பற்ற நடத்தும் சம்பவத்தில் அம்புட்டு பேரும் செத்து அரண்மணையில் ஆவியாக அலைகிறார்கள். அந்த. ஆவிகளை மீட்க இதே டாப்ஸி மறுபடியும் பிறந்து முயல்வதுதான் கதை என்று யோசித்து இருக்கிறார்கள்..

error: Content is protected !!