பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளன் ஒரு மாத காலம் பரோல் விடுப்பில் புழல் மத்திய சிறையில் இருந்து மே 28ம் தேதி விடுவிக்கப்பட்டவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பேரறிவாளன் 28 ஆண்டுகள் சிறையில் உள்ள நிலையில் நீரழிவு நோய் காரணமாக பாதிக்கப்பட்ட அவர், கொரானா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால் மருத்துவ காரணங்களுக்காக 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் சென்றார்
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட1 மாத காலம் பரோல் இன்று முடிந்தது.
இதனிடையே, கடந்த 19 ஆம் தேதி, பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. சிகிச்சை தொடா்ச்சியாக அளித்தால்தான் நன்மை என டாக்டா்கள் கூறுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை அளித்திருந்தார் .அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
அதே சமயம் பேரறிவாளன் இன்று அவரது வீட்டிலிருந்து புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்தான் மீண்டும் 30 நாட்கள் பரோல் வழங்கிய உத்தரவை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதைன் அடுத்து பேரறிவாளன் திரும்பி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.