ஒலிம்பிக் ; தமிழக வீரர் உள்ளிட்ட 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று!

ஒலிம்பிக்  ; தமிழக வீரர் உள்ளிட்ட 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று!

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க் இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த தமிழக வீரர் உள்ளிட்ட 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் பட்டியாலாவில் 24 வது தேசிய தடகள கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து முடிந்தது.

இதில் கலந்துகொண்ட 313 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 26 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 26 பேரில் 5 பேர் வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருந்தனர்.

தொற்று பாதித்த 5 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவரும், கேரளத்தைச் சேர்ந்தவர் ஒருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!