8 ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு! 

8 ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு   ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு! 

மிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் ஆபீஸ் அசிஸ்டெண்ட், கார்டனர், வாட்ஸ்மேன்  உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை ஐகோர்ட்  ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கூடிய இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்தவர்கள் கூட பலரும் விண்ணப்பிப்பது வழக்கம். அரசு வேலை என்பதால் பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம் ஆகியவை கிடைக்கும் என்பதால் கடும் போட்டி நிலவும்.

பணியிடங்கள் விவரம்:

1. சோப்தார் – 12

2. அலுவலக உதவியாளர் – 137

3. குடியிருப்பு உதவியாளர் – 87

4. ரூம் பாய் – 04

5. துப்புரவு பணியாளர் – 73

6. தோட்டக்காரர் – 24

7. வாட்டர்மேன் – 02

8. துப்புரவு பணியாளர் – 49

9. வாட்ச்மேன் – 04 என மொத்தம் 392 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

* சோப்தார் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.

* அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சமையல், ஹவுஸ் கீப்பிங்கில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

* குடியிருப்பு உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதும். ஓராண்டு craft course முடித்து இருக்க வேண்டும்.

ஹவுஸ் கீப்பிங், சமையல், பேக்கரி ஆகிய பிரிவுகளில் முடித்தவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இருந்தாலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

* இதர பணியிடங்கள் அனைத்திற்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்.

வயது வரம்பு:

01.07.2025 தேதிப்படி 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். அதாவது, 02.07.1988- க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.

சம்பளம் எவ்வளவு?:

* சோப்தார் – ரூ.15,700 – 58,100 /-

* அலுவலக உதவியாளர் – ரூ.15,700 – 58,100 /-

* குடியிருப்பு உதவியாளர் – ரூ.15,700 – 58,100 /-

* அறை பணியாளர் – ரூ.15,700 – 58,100 /-

* துப்புரவு பணியாளர் -ரூ.15,700 – 58,100 /-

* தோட்டக்காரர் – ரூ.15,700 – 58,100 /-

* வாட்டர்மேன் – ரூ.15,700 – 58,100 /-

* சுகாதார பணியாளர் – ரூ.15,700 – 58,100 /-

* வாட்ச்மேன் – ரூ.15,700 – 58,100 /-

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. (https://www.mhc.tn.gov.in/) என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க அவகாசம்:

06.04.2025 முதல் 05.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே கிளிக் செய்யவும். https://www.mhc.tn.gov.in/recruitment/login

error: Content is protected !!