7 G -பட விமர்சனம்!

7 G -பட விமர்சனம்!

டிகை சோனியா அகர்வாலின் திரை வாழ்வில் ’7G ரெயின்போ காலனி’ என்ற படம் இன்றளவும் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையில் அதே டைட்டிலில் பாதியை எடுத்துக் கொண்டு ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் பேய் அந்த வீட்டுக்கு குடி வரும் நபர்களை துன்புறுத்துகிறது. என்று நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழக்கப்பட்ட ஒரு கதையை வழக்கம் போல் ,மிகச் சுமாராகக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.!

அதாவது ரோஷன் பஷீர், ஸ்மிருதி வெங்கட்டை காதலித்து திருமணம் செய்து ஒரு புதிய ஃபிளாட்டில் தன் மகனோடு சொந்த வீடு வாங்கி குடியேறுகிறார். அந்த வீட்டில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான சினேகா குப்தா, தனக்கு கிடைக்காத நாயகன் யாருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணி சூனியம் வைத்து ஒரு சூனிய பொம்மையை அந்த வீட்டினுள் மறைத்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து நாயகன் ரோஷன் பஷீர் வேலை மார்க்கமாக வெளியூர் செல்கிறார். இந்தச் சமயத்தில் வீட்டில் தனியாக இருக்கும் ஸ்மிருதி வெங்கட் பல்வேறு அமானுஷ்யங்களை அந்த வீட்டினுள் சந்திக்கிறார். அந்த வீட்டுக்குள் இருக்கும் அமானுஷ்ய ஆத்மாவான சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட்டை பயமுறுத்தி கொடுமை செய்கிறது. ஸ்மிருதி வெங்கட்டும் இது தன்னுடைய வீடு, நான் அந்த வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கிறார். இதனால் அந்த பேய், ஸ்மிருதி வெங்கட்டின் மகனை துன்புறுத்துகிறது. இதனால் கோபமடையும் ஸ்மிருதி வெங்கட், அந்த அமானுஷ்ய ஆத்மாவை எதிர்த்து போராடுகிறார். இதையடுத்து அந்த அமானுஷ்ய ஆத்மா யார்? அது ஏன் இவர்களை துன்புறுத்த வேண்டும்? அந்த பேயிடம் இருந்து தன் மகனை ஸ்மிருதி வெங்கட் காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே 7ஜி படக் கதை..!

சோனியா அகர்வால் பேயாக வருகிறார் அவருடன் மோதும் பெண்ணாக ஸ்மிருதி நடித்திருக்கிறார். வீட்டில் அவ்வப் போது அமானுஷ்யம் தென்படும் போது ஸ்மிருதி மிரண்டு விடுவார் என்று பார்த்தால் அவர் அதற்கெல்லாம் கொஞ்சமும் கலங்காமல் அது பற்றி கணவனிடமும் சொல்லாமல் என்னதான் நடக்கிறது என்பதை பார்க்க துணிச்சலாக எதிர்த்து நிற்பது கொஞ்சம் புதுசு. அதே சமயம் பேயாக வரும் சோனியா அகர்வால் மேக்கப் போட்டுக் கொண்டு சுடிதார் அணிந்துகொண்டு மற்றொரு கதாபாத்திரமாகவே நடித்திருப்ப தால் பேய் குறித்த பயமே வரவில்லை.

ஸ்முருதி வெங்கட்டின் ஹச்பண்டாக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், மனைவியுடன் ஒரு பாட்டு, அலுவலக தோழியுடன் ஒரு பாட்டு என்று பாட்டு நடிகராக பயணித்திருக்கிறாரே தவிர, திரைக்கதைக்குள் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டும் திரைக்கதையில் சற்று தலை காட்டுபவர், அதன் பிறகு மீண்டும் வெளியூர் பறந்துவிடுகிறார். ஷன் பஷீரின் அலுவலக தோழியாக நடித்திருக்கும் சினேகா குப்தா, ஆசைப்பட்ட நபரை அடைவதற்காக மந்திரம், சூனியம் என்று முயற்சிக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவை அனைத்தும் காமெடி ஏரியாவாக மாறிவிடுவது பெருத்த ஏமாற்றம்.

சோனியா வீட்டு பக்கத்து வீட்டுக் காரராக வருகிறார் சுப்பிரமணியம் சிவா. இதுபோன்ற சாதாரண வேடங்களில் ஏன் நடிக்கிறாரோ தெரியவில்லை. இவர் கூப்பிட்டால் சோனியா பேய் வருகிறது அதனை அமைதியாக இருக்கச் சொல்லி சமாதானம் பேசுகிறார். இப்படி ஒரு பேய் எங்கு இருக்கிறது என்று தான் தெரியவில்லை.

மியூசிக் டைரக்டர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம் என்றாலும், திகில் காட்சிகளில் பின்னணி இசைக்காக இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். கண்ணா, அடுக்குமாடி குடியிருப்பையும், அதனுள் இருக்கும் 7G எண் கொண்ட வீட்டை மட்டுமே காட்டி ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார். அதில் பல காட்சிகள் அவர் நினைத்து போல் எடுபடவில்லை.

மொத்தத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் திருப்பங்கள் எதுவும் இல்லாமல் சப்பென்று உள்ள படமிது

மார்க் 2.25/5

error: Content is protected !!