June 2, 2023

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாதுன்னா.. முடியாது- சுப்ரீம் கோர்ட்!

நீட் ( NEET), ஜே இஇ ( JEE) தேர்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. அதனால் தேசிய தேர்வு ஏஜென்சி அறிவித்தபடி ஜே இ இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 6ம் தேதி வரையும் நீட் யுஜி -2020 தேர்வு செப்டம்பர் மாதம் 13ம் தேதியும் நடைபெறும் என்று தெரிகிறது.

நீட் ( NEET).ஜே இஇ ( JEE) தேர்வுகளை ஒத்திவைக்க கோரி 11 மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர் கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள். முதலில் அறிவித்தபடி கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த 2 தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும் ஆனால் ஒத்திவைக்க கூறியதன் காரணமாக இவை ஒத்திவைக்கப்பட்டன.

மனுச் செய்தவர்கள் இன்னும் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்கு அடங்கவில்லை, அதற்கென மருந்தோ தடுப்பு ஊசியோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை அதனால் போட்டித் தேர்வுகளை நடத்தி மாணவர்கள் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் தேசிய தேர்வு ஏஜென்சி நடந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

நீதிபதி அருண் மிஸ்ரா, கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மாணவர்களின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர்கள் விவாதங்களைக் கேட்டு நீதிபதிகள் நீங்கள் நீதிமன்றம் மட்டும் முறையாக இயங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வுகள் மட்டும் வேண்டாம் என்று கூறுகிறீர்கள். இந்த விவாதத்தை ஏற்கமுடியாது.

மாணவர்களுக்கான தேர்வுகளை ஒத்தி வைப்பது ஒரு நாட்டுக்கு ஏற்படும் பெரும் இழப்பாகும். எனவே அந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.