இரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா!

இரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா!

புதுடெல்லியில் இன்று காலை ‘இந்தியன் குளோபல் லீக்’ என்னும் 3 நாள் கருத்தரங்கை மோடி துவக்கி வைத்தார். 300 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் வல்லுனர்கள், தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ப்யூஸ் கோயல் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மறு மலர்ச்சி இந்தியா– சிறந்த புதிய உலகம் என்னும் தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கு இது. இதில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

அரசியல், வணிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம், பாதுகாப்பு, கலை மற்றும் கலாசாரம் எனப் பல்வேறு தலைப்புகளில் சுமார் 250 பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளனர். பல நாடுகளிலிருந்தும் 5,000-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் மோடி பேசும் போது‘சிக்கலான நேரத்தில் மறு மலர்ச்சி பற்றி இந்தியா பேசுகிறது. உலகளவில் இந்தியர்களின் திறமையின் பங்களிப்பை உலகம் கண்டிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியா– திறமைகளின் அதிகார மையமாகத் திகழ்கிறது’ என்று பெருமிதத்தோடு கூறினார்.

இந்தியாவில் உலக நாடுகள், பல்வேறு தொழில் துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என்பதை எடுத்துக் கூறினார்.

கடந்த 6 ஆண்டுகளில் வரி சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக லாபம் ஈட்டியுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.

சுயசார்பு இந்தியா என்னும் சிறப்புத் திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்தியில் பொருட்கள் பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளது. சர்வதேசச் சந்தைக்கு உதவும் சிறப்பு திட்டம் இது என்பதாகவும் பெருமிதத்தோடு கூறினார்.

‘நமஸ்தே’ என்று வணக்கம் அதாவது இரண்டு கைகளையும் கூட்டி நாம் சொல்லி வந்திருக்கும் நடை முறை இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் அதன் தாக்கம் காரணமாக உலக நாடுகளையும் சென்றடைந்திருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய பெருமை பேசும் பழைய கலாச்சாரம் உலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகளையும் சென்றடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் இன்றைய சிக்கலான நெருக்கடியான நேரத்தில் கொரோனாவை எதிர்த்து வேற போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பொருளாதார சீர்திருத்தம் பற்றி நாம் பேசுவதையும் உலகின் பல்வேறு நாடுகளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார் மோடி.

Related Posts

error: Content is protected !!