June 2, 2023

cellphone

செல்போன் நிறுவனங்கள் சார்பில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் செல்போனும் அத்தியாவசிய சேவையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

செல்போன் வாடிக்கையாளர்கள் குறிப்பாக பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்யாமலேயே சேவை தொடர அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோல குறிப்பிட்ட தொகையை பேசுவதற்கு ஒதுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே செல்போனையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்க வேண்டும். மற்ற அத்தியாவசிய சேவைக்கு மானியம் வழங்குவது போலவே எங்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.