வங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு

வங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு

நாட்டை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வர்த்தகம், தொழில், நிறுவனங்களின் பரிவர்த்தனை முடங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் கூலித் தொழிலாளர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்கு பிரதம மந்திரியின் நிதியில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை தொகுப்பு ஒதுக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.இதை அடுத்து வங்கிகளில் கடன் வாங்கியோர், தவணை தொகையை 3 மாதங்களுக்கு செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறிய போது, “கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை தீவிரமாக கவனித்து வருகிறாம். சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜிடிபி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி ஊழியர் 150 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும். வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.9 லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டது. இதனால், வீடு, வாகன கடனுக்கான வட்டியும், இ.எம்.ஐ., செலுத்தும் மாதங்களும் குறையும் வாய்ப்பு உள்ளது.

தொழில்துறையினரின் கடனுக்கான வட்டியும் குறையக்கூடும். வங்கிக்கடனை ஊக்கப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர் களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், மாத தவணை வசூல் செய்வதை 3 மாதங்கள் வங்கிகள் ஒத்தி வைக்கலாம். இந்த 3 மாதம் அவகாச காலத்தை கடன் பெற்றவர்களின் ‘சிபில் ஸ்கோரில்’ சேர்க்க கூடாது. தனியார் நிறுவனங்களுக்கான வங்கி கடனுக்கான மாத தவணை 3 மாதம் ஒத்திவைக்கப்படுகிறது”என்று அவர் கூறினார்.

Related Posts