அடேங்கப்பா சொல்ல வைக்கும் கட்சி நன்கொடைகள்!

கறுப்பப் பணத்தை உருவாக்கவே நம் நாட்டில் புதுக் கட்சிகள் உருவாகி வந்ததன் பின்னணியை நம் ஆந்தை ரிப்போர்ட்டரில் அவ்வப்போது சொல்லி வந்திருக்கிறோம். இதனிடையே 7 தேசியக் கட்சிகள் 5 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 234 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகளை அறியப்படாத நிதி மூலங்கள் மூலம் வசூலித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகப் பெற்ற நன்கொடைகள், தன்னார்வ பங்களிப்புகள், கூப்பன்கள் விற்பனை, நிவாரண நிதிகள், பொதுக்கூட்டங்களில் திரட்டப்படும் நிதி உள்ளிட்ட பெயர் குறிப்பிடாத நிதிகள் வருமான வரிக் கணக்கில் அறியப்படாத நிதிமூலங்கள் எனப்படுகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க., காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய 7 கட்சிகள் 2004 முதல் 2019 வரை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த கணக்குகள் தொடர்பான ஆய்வில் இந்த வகையில் இவை 11 ஆயிரத்து 234 கோடி ரூபாய் பெற்றது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!