ஒட்டு மொத்த இந்திய மக்களை அதிர வைத்து விட்ட சம்பவமான புல்வாமா தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், உடல்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி செலுத்தினார் . இதையடுத்து அந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்காக, வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ராணுவ வீரர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி ஒன்றை தனது தோள்மீது தூக்கி வைத்தபடி, ராணுவத்தினருடன் நடந்து சென்றார் ராஜ்நாத் சிங். இது காண்பவர் களை நெஞ்சை உருக்க்கியது
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தான். இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களால் கொல்லப் பட்டனர். படுகாயமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கொடூரமான தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் தனி விமானம் மூலம் டில்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்றடைந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்குடன், அங்கு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங், உள்துறை செயலாளர் ராஜீவ் கியூபா ஆகியோரும் வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். வீர்ர்களின் உடல்கள் பெட்டிகளில பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டன.
அப்பெட்டிகள் ராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டன. ஒவ்வொரு பெட்டியாக ராணுவ லாரிகளுக்கு எடுத்துவரப்பட்டது. ஒரு பக்கத்துக்கு மூவர் வீதம் 6 பேர் அந்த பெட்டிகளை துக்கி வந்து லாரிகளில் வைத்தனர். மற்ற வீரர்களுடன் சேர்ந்து வீர்ர்களின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை தோளில் சுமந்து லாரியில் ஏற்ற உதவினார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பின்னர் ஆளுநர் மாலிக் மாளிகையில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளோடு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷீமீரின் பல்வேறு இடங்களில் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.