அமெரிக்கா ; குடியேறிகளின் குழந்தைகள் விவகாரத்தில் ட்ரம்ப் மேலும் கெடுபிடி!

அமெரிக்கா ; குடியேறிகளின் குழந்தைகள் விவகாரத்தில் ட்ரம்ப் மேலும் கெடுபிடி!

ஆவணங்கள் ஏதுமில்லாமல் அமெரிக்கா வந்த பெற்றோர்களிடம் இருந்து 2500 குழந்தைகள் அந்நாட்டு அதிகாரிகளால் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். இது அப்போது உலக அளவில் மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது. இதனிடையே  அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகள் மீதான வழக்குகள் முடியும் வரை அவர்களின் குழந்தைகளை முகாம்களில் தங்க வைக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக குடியேறிகளின் குழந்தைகள் 20 நாட்கள் மேல் முகாம்களில் தங்க வைக்கக்கூடாது என கூறும் ஃப்ளோரஸ் ஒப்பந்தத்தை (Flores agreement) கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை கைது செய்து எல்லையில் உள்ள முகாம்களில் அல்லது சிறைசாலைகளில் அமெரிக்க அரசு அடைத்து வருகிறது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து பிரிந்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதற்கு எதிராக அதிபர் டொரனால்ட் ட்ரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் உட்பட பலர் குரல் கொடுத்தனர். அதை தொடர்ந்து பல குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டாலும் இன்னும் 2,900 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அதே சமயம்   பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் குடியேறிகளின் குழந்தைகளை முகாம்களில் தங்க வைப்பது குறித்து 1997ம் ஆண்டு போடப்பட்ட ஃப்ளோர்ஸ் ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்த ஃப்ளோரஸ் ஒப்பந்தம் படி சிறையில் அடைக்கப்படும் பெற்றோருடன் குழந்தைகள் தங்க அனுமதிக்க கூடாது.அவர்கள் தனியாக முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டும். அந்த குழந்தை கள் முகாம்களில் 20 நாட்கள் மட்டுமே தங்கவைக்கப்படலாம். அதன் பின் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த சமயம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும். எனவே வழக்கு முடியும்வரை  குடியேறிகள் தற்காலிகமாக அமெரிக்காவில் வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

குடியுரிமை தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளுக்கு தொடரும் என்பதால் சட்டவிரோத குடியேறிகள் அதுவரை அமெரிக்காவில் வாழ முடியும்.  இதன் காரணமாக பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதை தடுக்க குழந்தைகளை 20 நாட்களுக்கு மேல் முகாம்களில் அடைக்க கூடாது என்று கூறும் ஃப்ளோரஸ் ஒப்பந்தத்தை கைவிட அவரது நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.அதற்கு பதிலாக வழக்குகள் முடியும் வரை குடியேறிகளை சிறைவைக்கவும் அதுவரை அவர்களது குழந்தைகள் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்படவும் புதிய நடைமுறைகளை அமல்படுத்த  டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குழந்தைகளை நீண்ட நாள் சிறைவைக்கவும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் விரும்புகிறது என அவர்கள் சாடியுள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுவோம் என அறிவித்துள்ளனர்.

குடியேறிகளுக்கு நஷ்ட ஈடு

சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுவதால் அவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கடந்த புதன்கிழமை சில வழக்கறிஞர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் சேர்த்து வைக்கப்பட்ட பின்பும் கெட்ட கனவுகள், பயம், தனிமை, தூக்கத்தில் நடப்பது, நகத்தை ரத்தம் வரும் அளவுக்கு கடிப்பது போன்ற பல மனநல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இன்றே கவனத்தில் கொள்ள அவர்களின் பெற்றோர்களுக்கு அமெரிக்க அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து வழக்கறிஞர் குழுவை சேர்ந்த சூசன் சர்ச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து பதிலளிக்க அமெரிக்க நீதித்துறை மறுத்துவிட்டது.

error: Content is protected !!