பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் முறை இடி–மின்னல்!

அண்மையில் அரசக் குடும்பத்தில் கோலாகல திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் முறை இடி–மின்னல் தாக்கியதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதாவது மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று, திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றலை, குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று, குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன. இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது, 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது, 10 மில்லியன் கிலோ வாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும். இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.
உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடி தாக்குகின்றது. கூட்டமாக நடந்து செல்லும்போது, உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.
மின்னல் ஏற்படும் சமயத்தில், மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்து நடக்கும்போது, இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும் போது, அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம், இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும். காரணம், ஒளியின் வேகம் (மின்னல்) ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் ஆகும். இடியால் ஏற்படும் மின்சாரம், உயரமான மரங்கள், கட்டிடங்கள் மூலமாக பூமிக்கு பாய்ந்து செல்வதால், மரங்கள் எரிந்து விடுகின்றது கட்டிடங்கள் இடிந்து விடுகின்றன. உயரமான பொருள் எதுவும் கிடைக்காத போது, நமது தலையில் விழுந்துவிடும். ஆகவே பரந்த வெட்ட வெளியில் தனியாக செல்லக் கூடாது.
இந்நிலையில் பிரிட்டனில் தற்போது வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது. இதனால் பெரும்பாலான அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் தட்பவெப்பம் மாறியது. இரவு முழுவதும் பலத்த இடியுடன் கூடிய மின்னல் வெட்டியது. மின்னல் தாக்கியதில் பல இடங்களில் தேசம் ஏற்பட்டது.

மின்னல் தாக்கியதில் பிரிட்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் எரிபொருள் டேங்க் சேதமடைந்தது. இதனால் இங்கிருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
பிரிட்டனின் வேல்ஸ், மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நகரங்களில் இன்று (28ம் தேதி) கனமழை பெய்யும், வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்தாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்க்து.