பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நீந்தி சாதித்த இந்திய பெண் இயக்குநர்!

பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நீந்தி சாதித்த இந்திய  பெண் இயக்குநர்!

இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்திக் கடக்க தொடங்கி இருக்கிறார் ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி என்ற 48 வயது பெண். அதிகாலை 3 மணிக்கு நீந்ததொடங்கும் கோலி சியாமளா, பிற்பகல் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கோலி சியாமளா பெறுவார். இவர் அனிமேஷன் படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. ராமேசுவரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.

பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954-ம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966-ல்கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென்என்பவர் பாக் ஜலசந்தியை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக் கடந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971-ல்தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார். 2019-ல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது பள்ளி மாணவர் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தார். அதுபோல, கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்காவை சேர்ந்த எடி ஹு (45) என்பவர் முதல் பெண்ணாக பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்தார்.

இந்நிலையில்தான், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்ததெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சார்ந்த கோலி சியாமளா (47), தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்து கொண்டு இருக்கிறார். இது குறித்து சியாமளா, “எனது நீச்சல் பயிற்சியாளர் காவல்துறை உயரதிகாரி ராஜீவ் திரிவேதி. கிருஷ்ணா நதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும், கங்கை நதியில் 13 கிலோமீட்டர் தூரமும், கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் 14 கிலோமீட்டர் தூரமும் நீந்தி உள்ளேன். 2019இல் போர்பந்தரில் 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கமும் பெற்றுள்ளேன். ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு மற்றும் லட்சியம்” என்று தெரிவித்திருந்தார்ர்.

அத்துடன், “இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இந்திய – இலங்கை அரசிடம் முறையான அனுமதி பெற்றுள்ளேன். இதுவரை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே பலர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சி செய்வது இதுதான் முதல் முறை” என்றும் மகிழ்ச்சி பொங்க சொல்லி இருந்தார்அ