தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களில் மிட்நைட் முதல் கட்டண உயர்வு அமல் – அப்செட்டில் டிரைவர்கள்.

தமிழ்நாட்டிலும் நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக,பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முன்னதாக ஏபரம் மாதமே 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி. இருந்தது இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப் பட்டுகிறது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை உள்பட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது இதனால் லாரி ஓட்டுனர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கு மேல் சுங்கச்சாவடிக்கு கட்டும் நிலை உருவாகியுள்ளது என்று லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப் படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் 55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆக.31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிறது.
அதன்படி,
நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒருமுறைக்கான கட்டணம் ரூ.85ல் இருந்து ரூ.90,
இருமுறை கட்டணம் ரூ.125-ல்இருந்து ரூ.135
இலகு ரக வாகனங்களுக்கு ரூ.145-லிருந்து ரூ.160
இருமுறை கட்டணம் ரூ.220-லிருந்து ரூ.240
கனரக வாகனங்களில் லாரி, பேருந்துக்கு ரூ.290-ல் இருந்து ரூ.320
இருமுறைக்கு ரூ.440-ல்இருந்து ரூ.480
மிக கனரக வாகனங்களுக்கு ஒருமுறைக்கு ரூ.470-ல் இருந்து ரூ.515
இருமுறைக்கு ரூ.705-லிருந்து ரூ.770 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, ஒருமுறை பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.45 வரையும், இருமுறைப் பயணத்துக்கு ரூ.10 முதல் ரூ.65 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.
மேலும், கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர மாதாந்திர கட்டணம் ரூ.2,505 லிருந்து ரூ.2,740யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று மாதாந்திர கட்டணம் ரூ.4,385 லிருந்து ரூ.4,800யாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர மாதாந்திர கட்டணமாக ரூ.8,770 லிருந்து ரூ.9,595யாக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்று வர மாதாந்திர கட்டணமாக ரூ.14,095 லிருந்து ரூ.15,420 யாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகை வாகனங்களுக்கும் பணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் செய்யப்படும் பல முறை பயணங்களில் பாஸ்டேக் பயனாளிகளுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை அமலாகும்.
சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ. சுற்று வட்டாரத்திலுள்ள வணிக உபயோகம் இல்லாத கார், பயணிகள் வேன் அல்லது ஜீப் மாதாந்திர நுழைவுச்சீட்டு ரூ.150 மற்றும் சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ.க்கு மேற்பட்ட 20 கிலோ மீட்டருக்கு உள்ளாக சுற்று வட்டாத்திலுள்ள கார், பயணிகள் வேன், ஜீப்களுக்கு மாதாந்திர நுழைவுச் சீட்டு ரூ.300 வசூலிக்கப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதிகட்காரி கடந்த ஆண்டு அடுத்த 3 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்கசாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார். அதன்படி தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் இதுவரை அகற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த சுங்கச்சாவடிகளுக்கும் சேர்த்து கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது மோடி அரசு என்பது குறிப்பிடத்தக்க்து