24 மணி நேரமும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி – கர்நாடகா அதிரடி!

24 மணி நேரமும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி – கர்நாடகா அதிரடி!

மொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் இருந்தாலும் கர்நாடகாவில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது.  அதே சமயம் ஒரு ஊழியருக்கு கூடுதல் பணி நேரம் 10 மணி நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 வருடங்களாக 12 மணிக்கு மேல் எந்த கடைகளும் திறக்க கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில் தற்போது கர்நாடக அரசு புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், 24 மணி நேரமும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் ஆகிய அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்

* 10 பேருக்கு மேல் பணியாற்றும் எந்த கடைகளும் 24 மணி நேரமும் திறக்கலாம் !

* கட்டாயம் 3 பகுதி நேரங்கள் வகுத்து 10 பேருக்கு மேல் கொண்டு கடைகளை 24 மணி நேரமும் திறக்கலாம் !

* பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்க கூடாது !

* பெண்கள் அதிகம் வேலை செய்யும் ஒவ்வொரு கடைகளும் புகார் பெட்டி ஒன்றை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு கடைகளில் இருந்து வரும் புகார்களை கவனிக்க குழு ஒன்று அமைக்க வேண்டும் !

இவ்வாறு கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts