2ஜி ஊழல் வழக்கு:ஆ.ராசா,கனிமொழி, தயாளு மீது குற்றப்பத்திரிக்கை!

2ஜி ஊழல் வழக்கு:ஆ.ராசா,கனிமொழி, தயாளு மீது குற்றப்பத்திரிக்கை!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .பண மோசடி குற்றப்பிரிவின் கீழ் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளினால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தனது அறிக்கையில் கூறியது. இந்த முறைகேடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
2 g dayalu_and kani
இதைத் தொடர்ந்து முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர். தற்போது டெல்லி விசாரனை கோர்ட்டில் இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கப்பரிவு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரொமோட்டர் ஷாகித் பால்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களுட்ன, இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் சரத்குமார் உள்பட மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடி தொகையை, கலைஞர் டிவி நிறுவனத்துக்கு அளித்ததாக அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து டெல்லி நீதிமன்றம் இம்மாதம் 30-ம் தேதி முடிவு எடுக்கும்.இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் ஆலோசனைகள் வேண்டும் என்றே மறைக்கப்பட்டுள்ளன என்றும் இந்த ஊழல் வழக்கில் நான் பலிகடாவாக்கப்பட்டுள்ளேன். ஆனால், இதில் பலிகடாவாக நான் விரும்பவில்லை என்றும் தனியார் டிவிக்கு கொடுத்த ஒரு பேட்டியில் ஆ. ராசா கூறினார்.

Related Posts

error: Content is protected !!