ஸ்டெர்லைட் ஆலை-ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கிடுச்சு- வீடியோ

ஸ்டெர்லைட் ஆலை-ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கிடுச்சு- வீடியோ

துப்பாக்கிச்சூடு புகழ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஏகப்பட்ட வாத, பிரதிவாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டு முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டது.

நாடெங்கும் கொரோனா 2-வது அலை அதிகவேகமாக பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகியுள்னர் . நோய் தாக்கம் அதிதீவிரமாக உள்ளதால் ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் முடிவு செய்யப்பட்டு இன்று முதல்கட்டமாக 4.820 மெட்ரிக்டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டடு மருத்துவமனை சேமிப்பிக்கிடங்கில் சேகரிக்கப்பட்டது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கைகள் உள்ளது. இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால் நாள் ஒன்றுக்கு 6 டன்னுக்கு குறையாமல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

மேலும் நெல்லை மருத்துவமனையில் நெல்லை , தூத்துக்குடி, கன்னியாகுமரி , விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வந்து அனுமதி ஆவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நோயாளிகளை காக்கும் பொருட்டு தஞ்சாவூர் , நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் ஆக்சிஜன் வந்து கொண்டு இருந்தது. தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஓரளவு ஆக்சிஜன் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு உள்ளது.