சிக்கிம் அருகே இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்து 16 பேர் உயிரிழப்பு!-

சிக்கிம் அருகே இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்து  16 பேர் உயிரிழப்பு!-

சிக்கிம் மாநிலத்திலுள்ள வடக்கு பகுதியில் இருக்கும் பள்ளத்தாக்கு ஒன்றில் இந்திய இராணுவ வாகனம் ஒன்று சிக்கி விபத்துக்குள்ளானதில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுக்குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்தை நோக்கி 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். ஜெமா என்ற இடம் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, செங்குத்தான சரிவு கொண்ட ஒரு திருப்பத்தில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் இளநிலை அதிகாரிகள். 13 பேர் ராணுவ வீரர்கள்.

இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகள் துரதமாக மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்த 4 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த 16 இந்திய ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவரது சமூக வலைத் தள பதிவில், வடக்கு சிக்கிமில் நேரிட்ட சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் சேவைக்கும் உறுதிக்கும் நாடு அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!