இந்தியாவில் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

போன நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளது. இதுக் குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கியே தனது ஆண்டறிக்கையில் வெளி யிட்டுள்ளது.

“கடந்த 2021-22 நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள் 79 ஆயி ரத்து 669 என்ற எண்ணிக்கையில் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், 2022-23 நிதி யாண்டில் இது 91 ஆயிரத்து 110 கள்ளநோட்டுக்களாக அதிகரித்துள் ளது. இது கடந்தாண்டைக் காட்டிலும் 14 சதவிகிதம் அதிகமாகும்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல, “புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 20 ரூபாய் மாதிரியிலான கள்ளநோட்டுக்கள் கடந்த நிதியாண்டை காட்டிலும் 8.4 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளன.” “2022-23 நிதியாண்டில், 2,000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பிடிபடுவது குறைந்துள்ளது. கடந்த 2021-22 நிதி யாண்டில் 2,000 ரூபாய் கள்ள நோட்டு கள் 13 ஆயிரத்து 604 என்ற எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23-இல் இது 9 ஆயிரத்து 806 நோட்டுக்களாக குறைந்துள்ளது”.

கடந்த 2 ஆண்டுகளாகவே, 2000 ரூபாய் நோட்டுக்களை ஒன்றிய அரசு புழக்கத்திலிருந்து குறைத்து விட்ட தால், கள்ளநோட்டுப் பேர்வழிகள் உஷாரடைந்து, அவர்களும் 2000 ரூபாய் கள்ளநோட்டுப் புழக்கத்தை குறைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதேபோல், 10 ரூபாய், 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பிடிபடுவதும் குறைந்துள்ளது.

மொத்தப் பண மதிப்பை கணக்கிடு கையில், “2021-22 நிதியாண்டில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 கள்ள ரூபாய் நோட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், 2022-23இல் 2 லட்சத்து 25 ஆயிரத்து 769 கள்ள ரூபாய் நோட்டுகள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டை காட்டிலும் 2 சத விகிதம் குறைவு” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

error: Content is protected !!