பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்: சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), பூமியை கண்காணித்து துல்லிய தகவல்களை அளிக்க கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோளின் எடை 1,625 கிலோ ஆகும்.
ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்சவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை நவம்பர் 27ம் தேதி (இன்று) ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. அதன்படி பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது. கவுண்டவுன் முடிந்த நிலையில், இன்று காலை சரியாக 9.28 மணிக்கு, செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
திட்டமிடப்பட்ட பாதையில் துல்லியமாக பயணித்த பிஎஸ்எல்வி சி47 ராக்கெட், பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும், கார்டோசாட்-3 செயற்கைக்கோள் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 509 கிமீ தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.
.@isro launches #PSLVC47 carrying #Cartosat3 and 13 nanosatellites from Satish Dhawan Space Centre, #sriharikota
#PSLVC47 is the 21st flight of PSLV in 'XL' configuration (with 6 solid strap-on motors). This will be the 74th launch vehicle mission from SDSC SHAR, Sriharikota. pic.twitter.com/yhPpVtH6vb— PIB India (@PIB_India) November 27, 2019
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நிர்ணயிக்கப் பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி யடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அதன்பின் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்.
கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன்கொண்டது. எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன்கொண்டது. இது ராணிவத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ்.எல். வகையில் 21வது ராக்கெட் ஆகும். சதீஷ்சவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 75வது ராக்கெட் என்ற பெருமையை இது பெறுகிறது.