11 மாடி கட்டிட விபத்துக்கு சி.பி.ஐ விசாரணை:திமுக வலியுறுத்தி பேரணி!

11 மாடி கட்டிட விபத்துக்கு சி.பி.ஐ விசாரணை:திமுக வலியுறுத்தி பேரணி!

: சென்னை மவுலிவாக்கத்தில் நிகழ்ந்த 11 மாடி கட்டட விபத்துக்கு சிபிஐ விசாரணை கோரி, வருகிற 12 ஆம் தேதி ஆளுனர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடத்தப்பட இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.
chennai porur - jun 5
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் கடந்த வாரம் சனிக்கிழமையன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கட்டடம் இடிந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்க ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இந்த ஒரு நபர் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, கட்டட அனுமதி வழங்கியதில் விதி மீறல்கள் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், 11 மாடி கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததை கண்டித்தும், சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரியும் வருகிற 12 ஆம் தேதியன்று தி.மு.க. சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!