10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும்!

10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்து சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து பள்ளிப் பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், தொடர்ந்து எதிர்கட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்த பொது தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாலும், திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பொதுத்தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 15 (திங்கள்) – மொழிப்பாடம்

ஜூன் 17 (புதன்) – ஆங்கிலம்

ஜூன் 19 (வெள்ளி) – கணிதம்

ஜூன் 20 (சனி) – விருப்ப மொழிப்பாடம்

ஜூன் 22 (திங்கள்) – அறிவியல்

ஜூன் 24 (புதன்) – சமூக அறிவியல்

ஜூன் 25 (வியாழன்) – தொழிற்பாடம்

மேலும் விடுபட்ட 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் (Chemistry, Accountancy, Vocational Accountancy Theory, Geography) அனைத்தும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24.03.2020 அன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வை (Chemistry, Accountancy, Geography) எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறு தேர்வு 18.06.2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!