10 வயதில் டிப்ளமோ: அமெரிக்காவில் இந்திய சிறுவனின் சாதனை

10 வயதில் டிப்ளமோ: அமெரிக்காவில் இந்திய சிறுவனின் சாதனை

அமெரிக்கா வாழ் இந்தியரான தானிஷ்க் ஆபிரகாம் தனது 10 வயதில் டிப்ளமோ முடித்து சாதனைப் படைத்துள்ளான்.தற்போது இவன் அந்நாட்டின் மழலை மேதையாக அழைக்கப்படுகிறான். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் வசித்து வரும் தானிஷ்க் ஆபிரகாம். இவரது மூத்தோர்கள் இந்தியாவிலிருந்து குடிப்பெயர்ந்தவர்கள். சிறு வயது முதலே படிப்பில் சுட்டியான தானிஷ்க் ஆபிரகாம் ஏழு வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதுடன் தற்போது டிப்ளமோ பெற்றுவிட்ட இவனது வயது இப்போது ஜஸ்ட் 10. இந்த சிறு வயதிலேயே டிப்ளமோ பெற்று விட்டதாலேயே மழலை மேதையாகத் திகழ்கிறார்.
young-grad in usa
மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்டோவில் பிஜோ என்ற இந்தியர் வசிக்கிறார். தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி தாஜி ஆபிரகாம், கால்நடை மருத்துவர். இவர்களுக்கு தனிஷ்க் ஆபிரகாம் என்ற 10 வயது மகன் இருக்கிறான். இந்த சிறுவன் 7 வயதிலேயே ஆரம்பப் பள்ளி படிப்பை முடித்து விட்டான். அதன்பின், கலிபோர்னியாவில் உயர்நிலை பள்ளியில் சேர்ந்தான். 3 ஆண்டுகளுக்குள் உயர்நிலை டிப்ளமோவை அவன் முடித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சாக்ரமென்டோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிப்ளமோ பட்டம் பெற்றான்.

இது பற்றி, அவனது அம்மா தாஜி கூறுகையில், தனிஷ்க் 7 வயதில் ஆரம்பப் பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் முடித்து விட்டான். அதற்கு பின்னர் அவனை சிறப்பு திறன் படைத்தவர்களுக்கான உயர்நிலை பள்ளியில் சேர்த்தோம். இப்போது 10 வயதில் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்து டிப்ளமோ வாங்கியிருக்கிறான். அவனுக்கு உயிரியல், வேதியியல் பாடங்களை கற்க நான் உதவினேன். கணித பாடத்தை கற்க அவனது அப்பா உதவினார். சிறுவன் தனிஷ்க் கூறுகையில், எனக்கு அறிவியல் பாடத்தில்தான் அதிக விருப்பம். அதனால், எதிர்காலத்தில் விஞ்ஞானியாகவோ, டாக்டராகவோ வருவேன். எதிர்காலத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவும் எனக்கு ஆசை என்றான்.

error: Content is protected !!