1 லட்சத்து 75 ஆயிரம் கோடீசுவரர்கள் -சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 15ம் இடம் பிடித்த இந்தியா!

1 லட்சத்து 75 ஆயிரம் கோடீசுவரர்கள் -சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 15ம் இடம் பிடித்த இந்தியா!

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 15–வது இடம் கிடைத்துள்ளது.அதே சமயம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட சற்று குறைந்துள்ளது. ஆனாலுல் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 55-ல் இருந்து 56 ஆக அதிகரித்துள்ளது.
india_elephnad
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் சர்வதேச பொருளாதார மேலாண்மை குறித்த 14–வது ஆண்டறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.அதில், கடந்த 2013–ம் ஆண்டில் 14.6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது முந்தைய வளர்ச்சியை விட ரூ.912 லட்சம் கோடி ஆகும்.இது கடந்த 2012–ம் ஆண்டை விட 8.7 சதவீதம் கூடுதல் வளர்ச்சியாகும். இதன் மூலம் பணக்காரர்கள் அதிக அளவில் உருவாகி உள்ளனர்.

இந்தியாவிலும் வசதி பெருகி பணக்காரர்கள் அதிகரித்துள்ளனர். அந்த வகையில் சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியா 15–வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இங்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடீசுவரர்கள் உள்ளனர். இதே அளவில் வளர்ச்சி விகிதம் இருந்தால் வருகிற 2018–ம் ஆண்டில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியா 7–வது இடத்துக்கு முன்னேறும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதே நேரம் கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 55 பேர் சர்வதேச பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக ஒருவர் இணைந்துள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களின் நிகர சொத்து மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி யாகும். கடந்த ஆண்டு இது சுமார் 12.5 லட்சம் கோடியாக இருந்தது.

இதனிடையே உலகிலேயே பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் விக்கிறது. அங்கு 71 லட்சம் கோடீசுவரர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தாற்போல் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!