ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கோவை என்ஜினீயருக்கு ஆஸ்கார் விருது

ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய  கோவை என்ஜினீயருக்கு ஆஸ்கார் விருது

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சீனிவாச பட்டின் மகன் கிரண் பட்(41). அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு, முக பாவனைகளை தொழில்நுட்பப் பிரிவில் மாற்றுவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 2017-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது கிரண் பட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

oscar jan 11

பள்ளிக்கல்வியை கோவையில் பயின்ற கிரண் பட், தொழில்நுட்பக் கல்வியை ராஜஸ்தானின் பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். கணிப்பொறி அறிவியலில் டாக்டர் பட்டத்தை அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். ‘அவெஞ்சர்ஸ்’, ‘பைரேட்ஸ் ஆப் கரிபீயன்’, ‘வார்க்ராப்ட்’, ‘ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7’ போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் கிரண் பட் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு பாயல்பட் என்ற மனைவியும், 4 வயதில் மேகனா, புவனா என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். கிரண்பட் அமெரிக்காவில் லூம் டாட் ஏ.ஐ. என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன், அதன் மூலம் ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரங்களின் முகபாவனைகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே கோவையை சேர்ந்த கொட்டலாங்கோ லியான் (45) என்பவர் இதே துறையில் கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஆஸ்கார் விருதுக்கு கிரண்பட் தேர்வு செய்யப்பட்டு உள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த மாதம் 11-ந்தேதி அமெரிக்காவில் அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாங்கள் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளோம்’ என கிரண்பட்டின் பெற்றோர் தெரிவித்தனர்.

error: Content is protected !!