வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்! – மத்திய அரசு வார்னிங்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்! – மத்திய அரசு வார்னிங்

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
strile nov 19
இதுபற்றி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா வெளியிட்ட சுற்றறிக்கையில் மத்திய அரசின் எந்தவொரு ஊழியராவது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டு உள்ளது.

Related Posts

error: Content is protected !!