ரயிலில் பயணம் செல்லும் பெண்களின் கனிவான கவனத்திற்கு…!

ரயிலில் பயணம் செல்லும் பெண்களின் கனிவான கவனத்திற்கு…!

ஆணுக்கு பெண் சரிநிகராக பரிணமிக்கும் இந்த காலக்கட்டத்திலும் பெண்களுக்கு சமூக வாழ்வில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையில்தான் உலகம் இருக்கிறது. கு றிப்பாக பொது வாகனங்களான பேருந்து ரயில் களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதில் கொலம்பியா நாட்டில் உள்ள பொகாட்டா நகரம் முதலாவதாக உள்ளது. இந்த நகரில் பேருந்து ரயில்களில் செல்லும் 10ல் 6 பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பயணம் செய்ய வேண்டிய நிலையே காணப் படுகிறது. இதை தொடர்ந்து மெக்சிகோ நகரம், பெரு நாட்டில் உள்ள விமா நகரம் ஆகியவை உள்ளன. நான்காவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 2012ம் ஆண்டு பேருந்தில் பயணம் செய்த துணை மருத்துவ மாணவி பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தலைநகரில் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்திருந்தது. இந்நிலையில் ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘புதிய மொபைல் ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
R-Mitra aug 23
ஆர் – மித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை மொபைல் போனில் ‘டவுண்லோடு’ செய்து கொள்ள வேண்டும். ஆபத்தான நேரத்தில் மொபைல் போனில் ஒரு பட்டனை அழுத்துவ தன் மூலம் அருகாமையில் உள்ள ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் அளிக்க முடியும்.

இந்த ஆப் மூலம் ஆபத்தில் சிக்கியுள்ள பெண் இருக்கும் இடம், ஜி.பி.எஸ்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில் நுட்பங்கள் மூலம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தெரிய வரும். ஆன்லைனில் மட்டுமின்றி ‘ஆப்லைன்’ எனப்படும் மொபைல் போனில், இன்டர்நெட் வசதி இல்லாமல் இருந்தாலும் கூட எஸ்.எம்.எஸ்., மூலம் புகார் தெரிவிக்க முடியும். ‘கிழக்கு ரயில்வே வடிவமைத்துள்ள இந்த ஆப்பை, நாட்டின் அனைத்து ரயில்வே நிர்வாகமும் பயன்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்

error: Content is protected !!