பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைகிறது!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைகிறது!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கின்றன.இதன்படி, ஏப்ரல் 1–ந் தேதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசு குறைக்கப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு மேலும் 70 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Petrol-prices-down-
இந்த விலை குறைப்பின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய் 72 காசுகளாக இருக்கும்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையில் விற்பனை செய்கின்றன. அதேசமயம், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை இந்த நிறுவனங்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!