பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து ஜெயலலிதா இன்று விடுதலை!

பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து ஜெயலலிதா இன்று விடுதலை!

சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே ஜெயிலில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுதலை தொடர்பான நடைமுறைகள் முடிவடையாததால், அவர் நேற்று விடுதலை ஆகவில்லை. இன்று அவர் விடுதலை ஆகிறார்.
jaya oct 18
இதுகுறித்து ஜெயலலிதாவின் மூத்த வக்கீல் பி.குமார்,”ஜெயலலிதா விடுதலை தொடர்பான நடைமுறைகள் இன்னும் முடிவடையவில்லை. அதனால் அவர் நாளை (இன்று) விடுதலை ஆவார்.ஜாமீன் பற்றிய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் நகலுடன் இன்று பெங்களூர் தனிக்கோர்ட்டை அணுகுவோம். ஜாமீனை சமர்ப்பித்து, ஜெயலலிதாவை ஜெயிலில் இருந்து விடுதலை ஆகச் செய்வோம்.”என்று அவர் கூறினார்.

மேலு கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மாவும் இதே தகவலை தெரிவித்தார். ஜெயிலில் இருந்து ஜெயலலிதா இன்று நிச்சயமாக விடுதலை ஆவார் என்று அவர் கூறினார்.அவர் மேலும்,”ஜெயலலிதாவை நான் வியாழக்கிழமை இரவு சந்தித்து நலம் விசாரித்தேன். அவரது ஜாமீன் மனு பற்றி எதுவும் பேசவில்லை. நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும், எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்.”என்று அவர் கூறினார்.

இதனிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ,”ஒரு தலைவனைப் பற்றி பேரறிஞர் அண்ணா கூறும்போது, “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்றார். பேரறிஞர் அண்ணா வழியில், புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் நான் அவர்களுடைய வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.எனது வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. என் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும், பற்றின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்தோ, நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும்; நீதித்துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்த செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும்; யார் மீதும் எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்த வேண்டாம் என்றும்; யாரும் குறை கூற இடமளிக்காத வகையில் அமைதி காத்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கினை எப்பொழுதும் போல் செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் எனது அன்பார்ந்த தமிழக மக்களையும், எனது ஆதரவாளர்களையும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நீதிமன்றத்தில் நான் செய்துள்ள மேல்முறையீட்டில் நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.”என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!