‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரயில்வே & வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிச்சாச்சா?

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரயில்வே & வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிச்சாச்சா?

மிழ்நாடு முதல்வரால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘போட்டி தேர்வு’ பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் ஒன்றிய அரசின் ரயில்வே பணியாளர் தேர்வுகள், வங்கி தேர்வுகள், இந்திய குடிமை பணி தேர்வுகள் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு சிறந்த முறையில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசம்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக ரயில்வே, SSC, வங்கி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் அளிக்கப்படும். மாவட்டத்திற்கு 150 மாணவர்களுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.

புத்தகங்களுக்கான செலவீனங்களை அரசே ஏற்றுக்கொள்ளும்.

இப்பயிற்சி 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2023.

மேலும் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைய தளத்தை அணுகவும்.

இப்பயிற்சியில் பயன்பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் “http://candidate.tnskill.tn.gov.in/CE -NM/TNSDC_REGISTRATION.ASPX” பதிவு தளத்தில் பதிவு செய்யலாம்.

Related Posts

error: Content is protected !!