நரேந்திரமோடி ‘ஆப்’ஸ்! – பிரதமரின் அப்டேட் டெக்னாலஜி!

நரேந்திரமோடி ‘ஆப்’ஸ்! – பிரதமரின் அப்டேட் டெக்னாலஜி!

பிரதமர் நரேந்திர மோடி தொழில்நுட்ப பயன்பாட்டில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் உள்ளவர் என்பது தெரிந்த விஷயம்தான். இதற்காகவே இதற்காக மைகவ். இன் (mygov.In ) இணையதளம் மூலம் போட்டி நடத்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார் .இதனிடையே நரேந்திர மோடி ஆப்  என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார். இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம்.
modi apps
ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையான தகவல்கள், இமெயில்கள் மற்றும், மான்கி பாத் வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாம். பிரதமருடன் கலந்துரையாடலாம்.

தவிர அரசின் சாதனைகள் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக அப்டேட் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலியில் வசதிகள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார். இந்த மோடியில் இந்த புதிய தொழில்நுட்ப முறைக்கு பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த அணுகுமுறையை டுவீட்டர் கணக்கில் தொடர்பாளர்கள் வெகுவாக பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!