நயன்தாராவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்கத் தடை?

நயன்தாராவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்கத் தடை?

தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை விதிக்க முயற்சி நடப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது. தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் தெலுங்கில் அனாமிகா பெயரிலும் வருகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.சேகர் கம்முலு இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று நயன்தாராவை அழைத்து இருந்தனர். விழா அரங்கில் நயன்தாராவின் கட் அவுட் வைத்து இருந்தனர். அவரது உருவபட பேனர்களும் கட்டி இருந்தனர். ஆனால் இந்த விழாவுக்கு நயன்தாரா போகாமல் புறக்கணித்து விட்டார். இதையடுத்து அவருக்கு தெலுங்கில் அவரை புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
nayanthara
மிகப் பெரிய செலவில் தயாரிக்கப்பட்டு நடத்தப்படும் விழாவுக்கு நயன்தாரா வராததது வருத்தம் அளிக்கிறது என்று அப்படத்தின் டைரக்டர் சேகர் கம்முலு தெரிவித்தார். படத்தின் தயாரிப்பாளர்களும் நயன்தாரா மேல் கோபத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பெரிய தொகை சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காதது பொறுப்பற்ற செயல் என்றும் கண்டித்து உள்ளனர்.மேலும் நயன்தாராவை கண்டிக்கும் வகையில் தெலுங்கு படங்களில் நடிக்கத் தடை விதிப்பது குறித்து யோசிக்கின்றனர்.

இதற்கிடையில் இலியானா, தான் நடித்த ஜூலாய் என்ற தெலுங்கு படத்தின் விழாவில் பங்கேற்கவில்லை. அந்த படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். இதனால் படத்தின் டைரக்டர் திரிவிக்ரம் ஆத்திரமுற்றார்.இலியானாவை ஓரம் கட்ட திட்டமிட்டார். சக டைரக்டர்களிடம் பேசி இலியானாவை புது படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் தடுத்தார். இதனால் இலியானாவுக்கு தெலுங்கில் படங்கள் இல்லை. தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இலியானாவை போல் நயன்தாராவை ஓரம் கட்ட டைரக்டர் சேகர் கம்முலு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மற்ற டைரக்டர்களிடம் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டாம் என்று வற்புறுத்தி வருகிறாராம்.

error: Content is protected !!