தென்மேற்கு பருவமழை அட்வான்ஸாக மே 28 முதலே துவங்கும்!

தென்மேற்கு பருவமழை  அட்வான்ஸாக மே 28 முதலே துவங்கும்!

அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், அந்தமானில் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. அங்கு வரும் 20ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில், கேரளாவில் வழக்கமான ஜூன் 1ம் தேதிக்கு பதிலாக வரும் 28ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
moonsoon
இப்போதே நெல்லை, குமரி மாவட்டங்களில் வெயிலுடன் காற்று வீசத்தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள தென்காசி, செங்கோட்டை பகுதிகளிலும் நல்ல காற்று வீசுகிறது.இந்தியாவின் வருடாந்திர மழையில் 70 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் 235 மில்லியன் விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். வழக்கமாக ஜூன் முதல் தேதி தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு 4 நாட்கள் முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால், இதை எதிர்பார்த்து விவசாயிகள் சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை செய்ய தயாராகி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால், அதன் பின் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக டெல்லி வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!