தமிழக இரட்டை குழந்தைகள் ஆஸ்திரேலியா ஸ்பெல்லிங் போட்டியில் கலக்கல்!

தமிழக இரட்டை குழந்தைகள் ஆஸ்திரேலியா ஸ்பெல்லிங் போட்டியில் கலக்கல்!

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இரட்டை குழந்தைகள் ஆஸ்திரேலியா ஸ்பெல்லிங் போட்டியில் கலக்கி வருகிறார்கள்.
spell b twins
ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஸ்பெல்லீங் பீ என்ற நீண்ட ஆங்கில வார்த்தைகளின் எழுத்து களை சரியாக சொல்லும் போட்டியை நடத்திவருகிறது. இதில் நாடு முழுவதிலிமிருந்தும் 3000 குழந்தைகள் கலந்துக் கொண்டார்கள். மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு 50 குழந்தைகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டனர். தற்போது இவர்களில் இருந்து 12 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 12 பேரில் தமிழகத்தின் வேலூரை பூர்வீகமாக கொண்ட இரட்டையர்களான ஹார்பிதா(9) மற்றும் ஹார்பித்தா வும் அடங்குவார்கள். இருவரும் 50 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் தெரிந்துவைத்துள்ளனர். இறுதி போட்டி இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளது.

இது பற்றி இரட்டையர்களான ஹார்பிதா மற்றும் ஹார்பித் ஆகிய இருவரும் கூறும் போது ” இதற்காக நாங்கள் எந்தவித சிறப்பு பயிற்சிக்கும் செல்லவில்லை. நான்கு வயது முதல் வீட்டில் அப்பாவின் ஐ.பேடில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் விளையாட்டை விளையாடுவோம்” என தெரிவித்தனர்.

இவர்களின் சாதனை பற்றி தந்தை அண்ணாமலை கூறும் போது “ குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும், அவர்களை சொந்தமாக கற்றுக்கொள்ள அனுமதியுங்கள். முக்கியமாக கற்றலை மகிழ்ச்சிகரமாக மாற்றுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!