டீசல் விலை நள்ளிரவு முதல் 50 காசு உயர்வு!

டீசல் விலை நள்ளிரவு முதல் 50 காசு உயர்வு!

எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தியுள்ளது.இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
nov  30 disel
கடந்த சில ஆண்டுகளாக் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்ததிருந்தது. அத்துடன் மாதம் ஒருமுறை டீசல் விலையை 50 காசுகள் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்து, அவ்வப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு எனறு காரணம் காட்டி அவ்வ்ப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விலை உயர்வையடுத்து, சென்னையில், ஒரு லிட்டர் டீசலின் விலை 62 பைசா உயர்ந்து, ரூ.57.23க்கு விற்பனை செய்யப்படும்.

தற்போது தமிழகத்தில் நிலவும் டிரைவர்கள் பற்றாக்குறை, டயர், உறுதிப்பாகங்கள் விலை ஏற்றம் போன்றவற்றாலும் லாரிகளுக்கு சரக்குகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் உவிய வாடகை கிடைக்காததாலும் மாநிலம் முழுவதும் 30 சதவீத லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்கள் பலரும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடசனை திருப்பிச் செலுத்த முடியாமலும் தவிக்கிறனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் 12_வது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் லாரி போக்குவரத்துத் தொழில் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது..

Diesel price hiked by 50 paise a litre
*******************************************************
“Indian Oil Corporation has decided to increase the retail selling price of diesel by Rs.0.50 per litre, excluding state levies from midnight of Nov 30,” the largest oil marketing company (OMC) said in a statement.

Related Posts

error: Content is protected !!