சேதுவுக்கு ராசி லேது! டகிலு தர்பார்!By-ஆடுதுறை அய்யாசாமி

சேதுவுக்கு ராசி லேது! டகிலு தர்பார்!By-ஆடுதுறை அய்யாசாமி

தி மு க மாநாட்டில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால்தான் தமிழகம் உருப்படும், தென் தமிழ் நாடு வளம் பெறும் என்ற ரீதியில் கருணாநிதி திருச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.இது பற்றி தைரியமாக அலச ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் அர்ணாப் கோஸ்வாமி சாட்டையடிப் பேட்டி காண்பது போல தமிழகத்தில் யாரும் செய்யப் போவதில்லை.ஆகவே நாம் ஒரு கற்பனைப் பேட்டியை நிகழ்த்துகிறோம்.
arnab gosami
கர்ணப் ஆஸ்வாமியின் தொலைக்காட்சி நேர்காணல்:

தொலைக்காட்சி அவையில் கருணாநிதி போன்ற தோற்றமுள்ள பகுணாபதி, ஆற்காடு வீராச்சாமி போன்ற தோற்றமுடைய யேற்காடு சூராச்சாமி, ப சிதம்பரம் போன்ற தோற்றமுடைய கதம்பரம், ஜி கே வாசன் போன்ற தோற்றமுடைய ஜாசன், டி ஆர் பாலு போன்ற தோற்றமுடைய பி ஆர் டாலு ஆகியோர் உள்ளனர்.

கர்ணப் ஆஸ்வாமி:

இந்தநிகழ்ச்சியை லைவாகப் பார்க்கும் அனைவருக்கும் எனது இனிய மாலைவணக்கங்கள். ஒரு வேளை இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை நீங்கள் காலையிலோ மதியமோ பார்க்கிறீர்கள் என்றால் அதினும் இனிய காலை அல்லது மதிய வணக்கங்கள்.

2005ல்துவங்கப்பட்ட சேதுச முத்திரக்கால்வாய்த்திட்டம் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளதை எல்லோரும் அறிவோம். அத்திட்டற்கான அடிக்கல் நாட்டுவிழா பிரதமர் மன்மோஹன்ஸிங் அவர்கள் முன்னிலையில், 2005ல்மதுரையில் நிகழ்ந்தபோது– அதனை தமிழரின் 150 கனவாக வர்ணிக்கப்பட்டது.

சுமார் 9 ஆண்டுகள்கழிந்தும்திட்டம்நிறைவேறவில்லை. அத்திட்டம் வரும் பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகாவது நிறைவேற வாய்ப்புள்ளதா என்பதை – ஆராய, திமுக தலைவருக்கு நெருக்கமான பகுணாபதி, யேற்காடுசூராச்சாமி, பிஆர்டாலு ஆகியோரும், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான தொடர்புடைய கதம்பரம், ஜாசன் ஆகியோரும்வந்துள்ளனர்.

பகுணாபதி:

நாம தேர்தல் வேலையைப் பார்க்க வேண்டிய இந்த நேரத்துல, இந்த நிகழ்வுல கலந்துக்கறதுல என்ன புண்ணியமிருக்கும் என நினைக்கும் அளவுக்குநிகழ்வுகள்நடந்தேறியுள்ளன. எழுபதுகள்ள காமராஜர் என் கையைப் பிடித்து “நாடுபோச்சே” ன்னு 3 முறை சொல்லிவிசும்பி, விசும்பி அழுத விஷயத்தைப் பல முறை பேட்டிகள்ள சொன்னது நினைவுக்கு வருகிறது.

கர்ணப்:

அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

பகுணாபதி:

எந்த வித சம்பந்த பந்தமும் இல்லாம பகுணாபதிக்குக் கருத்துக்களைச் சொல்லும் உரிமை கூட இந்த தாழ்ந்த தமிழகத்தில் இல்லாமல் போய்விட்டதா?

கர்ணப்

கேள்விகள் கேட்க பத்திரிக்கையாளர்களுக்கு உரிமை பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே உண்டு. மற்ற தொல்லைக்காட்சிச் சேனல்களைப் போல வழவழா கொழ கொழாத்தனமா கேள்விகளை இந்த கர்ணப் ஆஸ்வாமி கேட்க மாட்டான். கேட்ட கேள்விக்கு நேரடியாக, தெளிவாக பதில் சொல்லுங்க!

யேற்காடு:

இதற்குபதில்சொல்லும்போதுஅண்ணனைஇடைமறிக்காமல் கேட்டால்கர்ணப்அவர்களதுபொதுஅறிவுவளருமாவளராதாஎன்பதைஅவர்எண்ணிப்பார்ப்பதுநல்லது.

பகுணாபதி:

நீ வாழ்த்தறியா இல்ல வாரறியான்னே புரியல்ல!

யேர்க்காடு சூராசாமி:

ஏன் அண்ணே?

பகுணாபதி:

என்கிட்டப் பேசினா கர்ணப் அறிவு வளரும் நீ நினைச்சது தப்போன்னு நீயே யொசிக்கிற மாதிரியும் ஒரு அர்த்தம் வருது. உன்னோட கருத்துக்கு அர்த்தம் அதுவா இருந்தா – அது அனர்த்தம்!

கர்ணப்:

நாம சம்பந்தமில்லாம பேசி நேரத்தை வீணாக்கிகிட்டு இருக்கோம். ஸப்ஜெக்ட்டுக்கு வாங்க.

யேற்காடு:

சேதுக்கால்வாய் விஷியத்துல ரொம்ப நல்ல மேட்டரெல்லாம் அண்ணர் சொல்லியிருக்காங்க! இராமர் பாலம்னு ஒரு எழவும் கிடையாது. பாலத்தக் கட்ட ராமரு எந்த இஞ்சினியரிங் காலேஜுல பட்சாரு, அவருக்கு ஒதவி பண்ணின கொரங்கு கரடி எல்லாம் எத்தப்படிச்சு, எத்தைக் கிழிச்சாங்கன்னும் நச்சுன கேட்டிருக்காங்க!

பகுணாபதி:

கொரங்கு, கரடிபத்தியெல்லாம் நான்சொன்னதாஞாபகமில்லையே!

யேர்க்காடு சூராசாமி:

இப்போ அதுவா முக்கியம்? கருத்த மேல சொல்லுங்க, அண்ணே!

பகுணாபதி:

தென் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக – பாரதி போன்ற பார்ப்பனர்கள் கூட சேதுக் கால்வாய் பற்றிக் கனவு கண்டார்கள்.

யேர்க்காடு சூராசாமி:

அண்ணே … பாரதியாரு ஏதோ பாலம் தான் கட்டணும்னு சொன்னதா ஞாபகம். கால்வாய் கட்டற ஐடியா …

பகுணாபதி:

என்னய்யா உளரற? கால்வாயை யாராவது கட்டுவாங்களா? கால்வாய் வேணும்னா கடலுக்கு கீழ நீளமா குழி பறிக்கப்படணும்.

யேர்க்காடு சூராசாமி:

கரெக்டு அண்ணே! இந்த விஷயத்துல நமக்கு மத்திய அரசு குழி பறிச்சிரிச்சி..

பகுணாபதி:

தென் தமிழகத்தில் தமிழனை வாழ வைக்க வியாபார விரிவாக்கம் தேவை. அதற்கு, அதிக கப்பல்கள் அவ்வழியே செல்ல வேண்டும். இலங்கையைச் சுற்றி நமது கப்பல்கள் செல்வதால் நமக்குப் பெரும் நட்டம். அதைத் தவிர்த்து நாடு வளருவதற்காகத் தான் நாம் சேது சமுத்திரத் திட்டத்தை பி ஆர் டாலு மூலம் செயல்படுத்த, மத்திய அரசை வற்புறுத்தி, அதற்கு மதுரையின் வெளிப்பகுதியில் அடிக்கல் நாட்டினோம். பத்திரிக்கைகள் அதை வானளாவப் புகழ்ந்தன. அதற்காக, ஒரு வரண்ட வயல்காட்டை வளைச்சுப் போட்டு, பெரிய குளுகுளு வசதி கொட்டாயப் போட்டு, அதுல சகல தொலைத் தொடர்பு வசதிகளையும் அளித்து ..

கர்ணப்:

இது தொலைத் தொடர்பு பற்றிய விவாதம் அல்ல. அதைப் பற்றிப் பேசினால் தொல்லைத் தொடர்புக்குக் கொண்டு போய் விட்டு விடும் என எச்சரிக்கிறேன்.

பகுணாபதி:

தேவை இல்லாமல் உச்ச நீதிமன்றம் சேதுக் கால்வாய் விஷயத்தில் மூக்கை நுழைத்து அழிச்சாட்டியம் செய்து, தமிழனை வாழவைக்கும் திட்டத்தை சதித் திட்டம் தீட்டி அழித்த்தை எதிர்த்து உண்ணாவிருதமிருந்த எனது வேள்விய சில மணி நேரத்தில் நிறுத்தி அதை நகைப்புக்காளாக்கியது. அய்யகோ தமிழா, தமிழ் அன்னையே! என்று தான் உங்களுக்கு விடுதலை பெற்றுத் தருவேனோ! அந்தத் திட்டத்துல மட்டும் தலையீடு இருந்திருக்கல்லன்னா, தென் தமிழகத்துல பழகிரியோட செல்வாக்கு அதிகமாகி, அவரது நண்பர் அழகிரி வளர, கட்சி வளரநாடு சுபிட்சம் ஆகி இருக்குமே!

கர்ணப்:

இது உங்கள் உட்கட்சி விவகாரங்கள் பற்றிய ஒப்பாரிக்கான நேரமல்ல. ஸப்ஜெக்ட்டுக்கு வாங்கய்யா! இப்போ சேது திட்டத்துக்கு தடை விதிச்சிருக்கறது உச்ச நீதி மன்றம். அதுலயும் மாற்று வழியில காவா வெட்டிக்க வழி கண்டுபுடிங்கன்னு சொல்லியிருக்காங்க!

பகுணாபதி:

மாற்று வழியில்தான் சிக்கல். அதனை ஒப்புக் கொண்டால், இது வரை வெட்டினது வேஸ்டுன்னு ஆயிடும். வெட்டினோமா இல்லையா என்ற கேள்வி எழும். செலவான பணத்துக்குத் தணிக்கை, தண்ணிக்கைன்னு ஆரம்பித்து விடுவார்கள். வாழையடி வாழையாக இது போன்ற அரசியல் பழிவாங்கும் சதிகளை …

கர்ணப்

மாற்று வழிக்கான பாதையைக் கூட உச்ச நீதி மன்றம் குடுத்திருக்குதாமே? பேசாமல் அந்த வழியை ஒத்துக்கொண்டு கால்வாய் வெட்டத் துவங்கி இருக்கலாமே?

பகுணாபதி:

இது கர்ண கொடூர ஆசாமித்தனமான அதிகப்பிரசங்கித் தனம் என்பதை இந்த பகுணபதி இந்த நேரத்தில் கர்ணபுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துகிறான்.

கர்ணப்:

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கர்ணபுக்கே! என்னை ஏச ஏச எனது நிகவுக்கு மெருகேறி … புகழ் ஓங்கும். வார்த்தைத் தாக்குதல்கள் எனது நிகழ்வுக்கு பின்பாட்டாகி, தாளம்போடும் உடன்பாடாகி விடுவது வேடிக்கையான வாடிக்கை!

கதம்பரம்:

தன்னடக்கம் தேவை மிஸ்டர் கர்ணப்.சில விஷயங்கள தெளிவு படுத்திக்க விரும்பறேன். 3 கப்பல்கள் கால்வாய் நோண்டப் பயன்படுத்தப்பட்டன. அந்த மூன்று கப்பல்களை அளித்த கம்பெனிகளுக்கும் இங்குள்ள டாலுவுக்கும் தொடர்பிருக்கறதா சில அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சொல்லறாங்க.

பி ஆர் டாலு

இது ஆதாரமற்ற, அபாண்டமான அரசியல் உள்-நோக்கு மட்டுமே உள்ள விஷமத்தனமான குற்றச்சாட்டு.

வி கே ஜாசன்

டென்சன் வேண்டாம் டாலு சார். நாம 6 பேரு தானே இங்க இருக்கோம். மேடைப் பேச்சு பாணியில எதுக்குக் கத்தறீங்க?

ப கதம்பரம்

[வாசனிடம்] இப்படி எல்லாம் பேசினா அவருக்கு மறுபடியும் கோபம் வரும்.[டாலுவிடம்] சரி … நீங்க சொல்லறத அப்படியே ஏத்துக்கறேன்னே வெச்சுப்போம். எனக்குத் தெரிஞ்சு ஆக்ஸிஸ் வங்கி தான் இதுக்கு முதல்ல காசு போடறதா ஐடியா இருந்துச்சி. ரூ.2247 கோடின்னு 2005ல ஆரம்பிக்கறப்ப சொன்னோம். இப்போ கிட்ட்த்தட்ட ரூ.10,000 கோடிகள் செலவாயிட்டதா – இதுல வட்டியும் சேரும் – ஒரு கணக்குச் சொல்லுது. அது மிகைப் படுத்தப்பட்டதுன்னாக் கூட – இது வரை ஆன செலவை ஈடுகட்ட முடியாதுன்னு வல்லுனர்கள் சொல்லறாங்க. வேற வழிகள்ள கால்வாய் தோண்டலாம்னு ஒரு கருத்து நிலவுது. ஆனாக்க, அதுக்கு செலவு மட்டுமே ரூ.24,000 கோடிகளத் தாண்டும்னு இப்போ என் நண்பர் பணி புரியும் மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கு. இந்த 24,000 கோடி ரூவாச் செலவை வசூல் பண்ணி – சம நிலைக்கு பேலன்ஸு ஷீட்டை சரி பண்ண – அடுத்த 50 வருஷங்களுக்கு மேலும் அதே தொகை செலவாகும். இத்தோட பண வீக்க விகிதாசாரத்தை கணக்குப் போட்டா …

வி கே ஜாசன்

உங்க கிட்ட இது தான் சிக்கலான விஷயம். ஒரு மேட்டர எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்ல உங்களுக்கு வரவே வராது. ஏதோ பொருளாதாரப் பேராசிரியர் கணக்கா – சர்ச் பேராயர் அல்லது ஏதாவது சாமியார் பேசற மாதிரி அனுக்கிரக பாஷாணம் …. சாரி பாஷணம் … மாதிரி போர் அடிக்கிறீங்க. மேட்டர சட்டுப்புட்டுன்னு தெளிவா – சுருக்கமாப் புரியற மாதிரிச் சொல்லுங்க.

பி ஆர் டாலு

நான் நினச்சேன், நீங்க புட்டு புட்டு வெச்சிட்டீங்க.

ப கதம்பரம்

சரி. புட்டு 1: சுமார் 50,000 கோடி செலவானாத் தான் சேதுக் கால்வாய் – அது பழைய பாதையிலயோ புதிய பாதையிலயோ உருவாகும் – அதுவும் உச்ச நீதி மன்ற உத்திரவுக்கு அப்புறம்.

புட்டு 2. இப்போதைக்கு மத்திய அரசு குடுத்திருக்கற கணக்குப் படி – ஒவ்வொரு கப்பலும் கால்வாயைப் பயனபடுத்த ரூ.5 லட்சம் கட்டணம் கட்ட வேண்டி வரும். ஆக, முழுசா இந்தக் கடன வசூல் பண்ணணும்னா கால்வாய் கட்டி முடிஞ்சு ரூ.50,000 கோடிகளை வசூலிக்க 10 லட்சம் கப்பல்கள் – அந்தக் கால்வாயைப் பயன்படுத்தணும்.

புட்டு 3: இது வரைக்கும், இந்தியா முழுதுக்குமாக் கணக்குப் பண்ணினா – வருஷம் ஒண்ணுக்கு மொத்தத்துல எல்லாத் துறைமுகங்களுக்குமாச் சேர்த்து 25,000 கப்பல்கள்னு கூட கணக்கு வரல்ல. இதே கணக்குல போனா … 10 லட்சம் கப்பல்கள் போய் வர, 40 வருஷங்கள் பிடிக்கும்.

புட்டு 4: அதாவது வருஷம் ஒண்ணுக்கு தென் தமிழகத்துல உள்ள முக்கியத் துறைமுகங்கள்ள – குறிப்பா தூத்துக்குடியில 10,000 கப்பல்கள் வந்திறங்கி, பொருட்கள இறக்கி, ஏத்திகிட்டுப் போகணும்.

புட்டு 5: அப்படி வர ஒவ்வொரு கப்பலும் 30,000 டன் எடை தான் இருக்கலாம்னு கடல் தொழில் வல்லுனர்கள் சொல்லறாங்க. அதாவது 30 கோடி டன் பொருள் இறக்குமதியாகி அதே அளவு பொருட்கள் ஏற்றுமதியாகணும். வருஷத்துக்கு 60 கோடி டன் பொருட்கள் எனக் கணக்குப் போட்டாக்க, ஒவ்வொரு 10000 டன் எடை உள்ள பொருளுக்கும் சுமார் 1 மெகா வாட் மின்சாரம் தேவை. அந்த மின் நிலையங்களை உருவாக்க மட்டுமே ரூ.24,000 கோடி இன்னும் வேணும்.

புட்டு 6: அந்த அளவுக்குப் பொருள் உற்பத்தி பண்ண தொழிற்கூடங்கள், அவற்றுக்கான சாலைகள் இப்படி சொல்லிகிட்டே போகலாம். எல்லாமாச் சேர்ந்து சுமார் ரூ. 10 லட்சம் கோடி வருது.

பி ஆர் டாலு

அப்பா! இவ்வளவு இருக்கா?

கர்ணப்

உண்மையைச் சொல்லுங்க மிஸ்டர் டாலு. நீங்க இப்போ வாயைப் பொளந்தது – திட்டத்துடைய விரிவாக்க வீச்சுக்காகவா இல்ல அதோட விரிவாக்கத்தினால கிடைக்ககூடிய கமிஷன் கணக்குக்காகவா?


ஜாசன்:

கமிஷன் புத்தியினால் தான் மத்திய அரசு பல விஷாரணைக் கமிஷன்கள் போட வேண்டி வந்தது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ப கதம்பரம்

ஏதோ கமிஷனே தொடாத மாதிரி பேசறீங்களே? அண்ணா ஹஜாரே குடுத்த ஊழல் பட்டியலப் படிச்சா, எல்லார் பொழப்பும் நாறிப் போயிரும்.

பி ஆர் டாலு

அந்தப் பட்டியல்ல ஜாசன் சாருக்கு நெருக்கமான சிலருக்கு ரொம்ப மேல உங்களுக்கு நெருக்கமானவங்க இருக்காங்க என்பது எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர இரகசியம்!

கர்ணப்:

ஸப்ஜெக்டுக்கு வாங்க சார்! உங்க குழாயடிச் சண்டைகளை வெளியே வெச்சுக்குங்க!

ப கதம்பரம்

கமிஷன் விவகாரத்தைப் பேசி குட்டையைக் குழப்பினது யார்? பெரும் தலைவர் காமராஜர் இரு திராவிடக் கழகங்களையும் சேர்த்து ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்னு சொன்னத மிஸ்டர் டாலு நீங்க ஞாபகம் வெச்சுக்கணும்.

பி ஆர் டாலு

எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அந்தக் குட்டையிகள்ள தான் உங்கள மாதிரி ஆளுங்க தொடர்ந்து மீன் பிடிக்கறீங்க.


கதம்பரம்:

புடிச்ச மீன்ல நீங்க தான் ஷேர் கூடத் தரது இல்லை. சென்ற ஆட்சியின்போது எங்க கட்சிக்கார்ங்களால ஒரு ப்யூன் வேலைகூட எங்க ஆளுங்களுக்கு வாங்கித் தர முடியல்ல! இத்தனைக்கும் – எங்க கட்சியோட ஆதரவுனால தான் ஆட்சி 5 வருஷம் நிலைச்சுது.

பகுணாபதி

இதுலேந்து ப்யூன் வேலைக்குக் கூட லாயக்கில்லாதவங்களைத் தான் உங்க கட்சி சிபாரிசு பண்ணிச்சுன்னு தெளிவாகுது. அதுக்குக் கூட நீங்க பத்திரிக்கையில விளம்பரம் குடுத்ததுனால தான் உங்க கட்சி அலுவலகத்துல ஒரு நாளைக்காவது ஒரு சிலர் வந்ததாகச் செய்தி. அதுலயும் குழப்பம். குடுமிப்பிடி சண்டை, சட்டைகள் கிழிந்தன. வெட்கக்கேடு.

கர்ணப்:

இந்த மீன் மார்க்கட் சண்டையைத் தவிர்த்து ஸப்ஜெக்டுக்கு வந்து ஆக்க பூர்வமா விவாதிச்சா நல்லா இருக்கும். கால்வாய் வந்தா இவ்வளவு விஷயங்கள் நடக்கணும்னு ஒரு பக்கம் நல்ல விஷயமாச் சொல்லறீங்க. மறுபக்கம் ரூ.10 லட்சம் கோடி செலவுன்னு சொல்லி வயத்தைக் கலக்கறீங்க. இதெல்லோம் தேர்தல்ல எப்படி பயன்படும்னு சொல்லுங்க.

ப கதம்பரம்

இந்த மேட்டரப் பெரிசா மக்கள் மத்தியில வெச்சா … கிட்ட்த்தட்ட 2 கோடி சனத்துக்கு வேலை கிடைக்கும்.

கர்ணப்:

மேல சொல்லுங்க! பழகிரியோட அரசியல் செல்வாக்கு மதுரையிலும், ஜாசன் சாரோட வாய்ஸு தஞ்சையிலும், உங்க இன்ஃப்ளுயன்ஸு செட்டி நாடுலயும் அரசாங்க செலவுல அதிகமாகிப் பொங்கி வழியும். எதிர் கட்சி பதவிச் சண்டையை விட திட்டம் நிறைவேற ஆரம்பிச்சாக் கிடைக்கற ஆதாயத்துக்கான போட்டி அதிகரிக்க … எல்லாருக்கும் இப்போதுள்ள குழப்பங்கள மறக்க இது உதவியா இருக்கும். மத்தியில ஐ.மு.கூ வந்தாத்தான் இதெல்லாம் நடக்கும்னு மக்கள மாக்களாக்கலாம்!

பி ஆர் டாலு

இதுமிகவும்பொறுப்பற்றரீதியானஅபாண்டமானகுற்றச்சாட்டு. இவைஒருதொலைக்காட்சிநங்கூரருக்குஉகந்தவார்த்தைகள்அல்ல.

கர்ணப்

நான் ந்ங்கூரனல்ல, நன்கு, நல்லதை கூரான வார்த்தையில் குறை கூறி முகத்திறைகளை கிழித்தெறியும் நக்கீரன்!

ப கதம்பரம்

அமைதி, கர்ணப்!. எதுக்கு இமோஷனலாகுறீங்க? இது வெறும் ஒரு தொலைக்காட்சி நிகழ்வு. அவ்வளவுதான். உங்களயும் என்னையும்மாதிரி தெளிவாச் சிந்திக்கறவங்க – பரிதாபகரமா –திராவிடக் கட்சிகள்ள இல்ல.தமிழகத்துல உள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் தேசியக் கட்சிகள்ளயும் இல்ல.

பி ஆர் டாலு

ம்ம்ம்! மேலயும் பேசி, உங்க உண்மையான பேராசைகளைச் சொல்லி முடிங்க! உங்கள இப்போதைக்கு தமிழக முதல்வராக நாங்க எல்லாம் கூஜாத் தூக்கணும். அப்புறமா, கூஜா பல்லக்காயிடும். நீங்க பிரதமராக நாங்க பல்லக்கையும் தூக்கணும். நீங்க பிரதமரானதுக்கு அப்புறமா, உங்களை தெய்வமாக்க நாங்க காவடி எடுக்கணும். போன அசெம்ப்ளி தேர்தல்கள்ள தமிழ்கத்துல நாம சுத்தமா வாஷ் அவுட் ஆக உங்களுக்கு நெருக்கமான ஒருத்தரோட வாதத்திறமை தான் காரணம்! அதுனால, ஏற்கனவே நம்ம கூடணிக்கு பழனியப்பன் மொட்டை பொட வேண்டி வந்திரிச்சி.

ப கதம்பரம்

சில படித்த அறிவாளிகள் மேல உள்ள பொறாமைலயும், வயித்தெரிச்சல்லயும் காழ்ப்புணர்வுலயும் பேசறீங்க. அவரோட, என்ன மாதிரி உள்ளவங்களோட மூளை மட்டும் தான் வளரணும்னு யாரும் கட்டளை பிறப்பிக்கல்லியே? நீங்க ஹார்வார்டு போயிப் படிக்கக் கூடாதுன்னு யாராச்சும் தடுத்தாங்களா? அமெரிக்கா விசா குடுக்கல்லியா? ஏதோ, நான் நாலு வார்த்தை படிச்சு, எட்டு வார்த்தை நல்லாப் பேசறேங்கறதுக்காக, ஏதோ கொலைக் குற்றம் பண்ணினது மாதிரி என்னையே குறை சொல்லறீங்க?

பி ஆர் டாலு

நீங்க படிச்ச 4 வார்த்தைகள் நல்லதா இல்லையான்னு இப்போ முக்கியமில்ல. பேசற 8 வார்த்தையும் எக்குத்தப்பா ஏட்டிக்குப் போட்டியா இருக்குங்கறது தான் தப்பு. நீங்க 4 வார்த்தையை நல்லாப் படிச்சதாலேயே அரசியல்ல பெரிய ஆள்னு நீங்க உங்களப் பத்தி அபிப்பிராயப் படறது உங்களுக்கு வேணும்னா சரியாப் படலாம். அப்போ … இத்தினி வருஷமா அரசியல்ல இட்லியா நுழைஞ்சு தோசையாத் தேஞ்சு போன நாங்க எல்லாம் என்னாவறது? இங்கிலீசுல நீங்க 2 வார்த்தை பேசறீங்கங்கறதுக்காக நீங்க முதல்வராயிடணும்னு சொன்னா – 5- நட்சத்திர ஸ்டார் ஹோட்டல்ல வேலை பாக்கற வரவேற்பாளரெல்லாம் முதல் மந்திரியியாடிலாமே!

கர்ணப்:

ஸப்ஜெக்டுக்கு வாங்க சார்! நாம சமுத்திரக் கால்வாய் பத்திப் பேசிகிட்டு இருக்கறோம்.

பகுணாபதி:

நாணயங்கள் குவிகையில் ஞாபகங்களும், நாணமும், நாணயமான நன்னடத்தையும் குறையும்னு அண்ணா சொல்லியிருக்கிறார்.

கர்ணப்:

அப்படி எப்போ சொன்னாரு?

பகுணாபதி:

நாலு நல்ல வார்த்தை சொல்லும்போது – அதுங்கள மறைந்தவர்கள் சொன்னதாக மேற்கோள் காட்டுவது தான் தமிழ் மரபு என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னைதப் பயன்படுத்தி திராவிடக் கட்சிகள் தமிழக அரசியலில் முன்னேறியுள்ளன என்பதை நாடே அறியும். பொதுவாகக் கடவுள் பக்தி முத்திய முட்டாள்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்லுவாங்க. பகுத்தறிவுப் பாசறையில பாடம் கற்ற நாம், அவற்றை அண்ணாவிற்கே சமர்ப்பணம் செய்கிறோம். அவரும் இதுக்கு வசதியா ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னாரு. நாங்கள் அரசியல் குலம். எங்களுக்கு அண்ணா ஒருவரே தேவர்!

கர்ணப்:

ஸ்ப்ஜெக்டுக்கு வாங்க சார்! நாம– சேதுக் கால்வாயைப் பத்திப் பேசிகிட்டு இருந்தோம்.

பகுணாபதி:

பேசிகிட்டு இருந்தோம், பேசிகிட்டு இருக்கோம், பேசிகிட்டே இருப்போம். அந்தத் திட்டம் நிறைவேறற மாதிரி எனக்குத் தோணல்ல. நிறைவேறினாலும், அதுலதமிழனுக்கு இனி எந்த விதத்திலும் லாபம் கிடைஜக்காதோன்னு தோணுது.

கர்ணப்:

அப்படி ஏன் சொல்லறீங்க?

பகுணாபதி:

சேதுக் கால்வாய்ன்னு சொல்லிச் சொல்லி தம்பி பழகிரியை வாழ வைக்க வழிவகுத்திருக்கலாம். சேதுவால் எந்த ஹேதுவும் இல்லாததால பழகிரி அரசியல் வாழ்வு சாப்பிட்டு முடித்த வாழை இலை மாதிரி ஆகிவிட்டது. அவரது நண்பர் அழகிரி வாழல்லங்கறது ஒரு புறமிருக்க, ஸ்டாலின் அவர்களின் உயிர்த் தொழன் – எனது மகன் தம்பி க்ருஷேவ் முடிசூடுதல் விஷயத்துலயும் கட்சித் தொண்டர்கள் அலகு குத்தி வேண்டுதல்கள் நடத்தும் அளவுக்குப் பகுத்தறிவில்லாத அவல நிலை வந்துவிட்டது.

கர்ணப்:

கால்வாய் வேலைகள் நிறுத்தப்படுவதும், இலங்கையில் புலிகள் பெரும்டாலும் அடக்கப்படுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்த விஷயங்கள். 30,000 டன் எடையுள்ள கப்பல்கள் தான் அந்தக் கால்வாயில் செல்ல முடியும்நு சேது சமுத்திரத் திட்ட அறிக்கை சொல்லுது. அந்த எடை உள்ள கப்பல்கள்உலகத்துல அதிகபட்சம் 7000கூட இல்லையாம். அதுல பெரும்பாலவை புலிகளோட பினாமிக் கம்பெனிகள்னு ஒரு குற்றச்சாட்டும் இருக்கு. அந்தத் திட்டமே புலிகளுக்கு ஆயுதம் கடத்தப் பயன்பட இருந்த நடந்திச்சின்னும், அவங்கள இலங்கை அரசு அடக்கினதுனால, கால்வாய் திட்டமும், கால்வாசிகூட முடியாம வால் காய் ஆயிரிச்சின்னு சொல்லறவங்க நிறையவே இருக்காங்க. இதுக்காக மத்திய அரசை இந்த அளவுக்குப் பணத்தை செலவிட வைத்ததாக பல வல்லுனர்கள் கருத்துத் தெரிவிச்சு இருக்காங்க. டாலுவுக்கு வேண்டிய ஒருத்தரோட கப்பல் கம்பெனிகளுக்கு லாபம் கிடச்சதுனாலதான் அவருக்கு வேண்டிய ஒருத்தரோட மத்திய மந்திரிப் பதவி முந்திரிக்கொட்டையாச்சுன்னு என்னை மாதிரி உள்ளவங்களுக்குன்னு பலர் சொல்லறாங்க.இதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க சார்!

டாலு:

இன்றுமே டெல்லி அரசியல் தமிழனை அடிமைப் படுத்தியது என்பதை சரித்திரம் நிரனதரமாகச் சொல்லி, தமிழன் தரித்திரனான வரலாறை மறந்து பேசறீங்க கர்ணப்.

யேர்க்காடு சூராசாமி:

உங்கள மாதிரியானவங்களோட விஷமத்தனமான பேச்சுக்கள் என்றுமே மறத் தமிழர்களோட மனங்களயும் மான்ங்களையும் மண்ணாக்கிவிடாது, கர்ணப்!

கர்ணப்:

நான் அடிப்படைக் காரணத்திற்கே வருகிறேன். இத்தனைக் காலமா எல்லாத் தமிழ்ர் கட்சிகளுமே சேதுகால்வாய் விஷயத்துனால லாபம், தென் தமிழகம் வாழும்னு சொல்லிகிட்டே இருந்தீங்களே? அந்த வாதத்தை ஏன் திடீர்ன அந்தரத்துல தொங்க விட்டு விட்டுட்டீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க. உண்மையிலேயே அந்தத் திட்டத்துனால தமிழ் மக்களுக்கு லாபமிருந்தா, அதைத் தொடர்ந்திருக்கலாமே? மாற்று வழியில குழி பறிச்சிருக்கலாமே? இதுக்கு யாரு பதில் சொல்லப் போறீங்க? எப்படிப் பதில்சொல்லப்போறீங்க?

பகுணாபதி:

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் நீங்கள் பேசலாம் தம்பி. ஏற்கனவேதம்பிகள்ராஜா, தயா, இடியாப்பச் சிக்கலில் உள்ளார்கள் என்பதைத் தலைவர் அறிவார். அவருக்கு உங்களிடம் ஏதேனும் பதிலுண்டா? 2ஜி விஷ விஷயம் வயிற்றைக் கலக்கியதால், சகோதரி கனிமொழி மருத்துவ மனை செல்லவேண்டியதாயிற்று. இப்படி எல்லாம் பிணாத்தினால், மூழ்குபவன் மிதக்கும் ஒற்றை வைக்கோலை பிடிக்க முயல்வது போல, அழகிரி மீது மைய அரசு எங்க்வயிரிக் கமிஷன் வைத்தால், நடக்கவிருக்கும் குடும்ப ஒற்றுமைக்கான கழகத் தலவரது கனவில் மண் விழுமே! அதற்கு என்ன வழி? ஈழத் தமிழனுக்கு உதவியதாக எங்கள் மீது குற்றம் சாட்டி 1991ல் கழக ஆட்சியைக் கவிழ்த்ததையும், அன்று எங்களது முகங்கள் மீது பூசப்பட்டப் பொய்யான ஜெயின் கமிஷன் கறையை துடைத்து மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க கலைஞர் என்ன பாடெல்லாம் பட்டார் என்பதை நீங்கள் மறக்கலாம், நாங்கள் மறக்க மாட்டோம்.

கர்ணப்:

எல்லா மேட்டரையும் – குறிப்பா சேது மேட்டரையே வெச்சு திசை திருப்ப – ஏதாவது ஒரு நடிகரைத் தேர்ந்தெடுத்து – அவரை அடுத்த முதல்வர் பதவிக்கு ஆதரிப்பதாக நீங்க சொல்லத் தயாரா? இப்போ – விஜய்காந்தையே எடுத்துக்குங்க. அவரு 2009 பாரளுமன்றத் தேர்தல்கள்ள 25 இடங்கள்ள ஜனநாயக முற்போக்குக்கூட்டணியை – அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை … வாக்குகளைப் பிரிச்சு ஜெயிக்க வெச்சாரு. உங்களுக்கு வேணும்னாலும், வேண்டாம் என்றாலும் இப்போதைக்கு அவருதான் எதிர்கட்சித் தலைவரு. அத்தையே ஒரு நீட்டு நீட்டி, தமிழ் ஈழ மேட்டருக்கும், சேதுக்கால்வாய்மேட்டருக்கும்,நீங்கசொல்லறமாதிரிஆதரவுகுடுத்தா –உங்க தலைவர் முன்ன அஇஅதிமுக – திமுக இணைப்பு ஃபார்முலா சொன்ன மாதிரி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தம்பி விஜய்காந்த் தன்னோட கட்சியை இணைச்சாலோ, அல்லது அரசியல் கூட்டு, பொரியல்னு எத்தையாவது வெச்சாலோ – கட்சித் தலைவர் தம்பி ஸ்டாலின் ஆனால் முதல்வர் பதவிக்கு – அவரை விடப் பிரபலமானவராகத் தென்படும் விஜய்காந்த் அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் இருக்குன்னு சொன்னீங்கன்னா, அரசியல் மாற்றம் ஏற்படுமே! லாபங்களப்பாருங்க. அ. இ. அ. தி. மு கவோட சேர்ந்ததுனால அவரு எதிர்கட்சித் தலைவரானார். ஆனால், அவர் கட்சியிலேந்து பலர் ஆளும் கட்சிக்குக் கிட்ட்த்தட்ட போயிட்டதுனால, அந்தப் பதவி இப்போ ஆட்டம் காண ஆரம்பிச்சிருக்கு.சேதுக்கால்வாய் மேட்டருக்காக, தென் தமிழ்நாட்டை வாழ வைப்பதற்காக உங்க கட்சியோட ஒத்துழைச்சா, உங்க நண்பர் ஸ்டாலின் தனக்கு வரக் கூடிய எதிர்கட்சித் தலைவர் பதவியை –விட்டுக் கொடுக்கத் தயார்னு உங்க தலைவர் அறிவிப்பாரா? தமிழுக்காகவும், தமிழனுக்காகவும், சேதுக் கால்வாய்க்காகவும், அதனால் ஏற்படும் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் ஸ்டாலின் கட்சிப் பதவியையே துறக்கும் துறவின்னு மக்கள் புகழ்வாங்க. இதனால் வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல உங்களுக்கு அதிக இடம் கிடைச்சா – தேசிய ஜனநாயகக் கூட்டணியோடயோ 3-வது அணியோட யோ பேசி மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க வாய்ப்பிருக்குமே ஒருபக்கம் அழகிரி முழுசா அடங்கிடுவாரு – ஏன்னா ஸ்டாலினோட வருங்கால எதிர் கட்சித் தலைவர் பதவி போயிடுமேன்னு அழகிரி சந்தோஷப்படுவாரு. அவரைப் பாராளுமன்றத் தேர்தல்கள்ள நிக்க வைக்கலாம். ஜெயிச்சா, கலைஞர் செல்வாக்கு மட்டும் தான் காரணம்னு உங்க தலைவர் சார்பா யார் வேணும்னா சொல்லலாம். இல்லைன்னா உட்கட்சிச்சண்டைன்னு மழுப்பலாம். இது ஒரு நல்ல வாய்ப்புன்னு ஸ்டாலின் ஒத்துக்கலாம், ஏன்னா … இப்போதைக்கு அவர்கிட்ட எதிர்கட்சிப் பதவி இல்லன்னாலும், கட்சித் தலைவர் பதவி அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கு, உருவாகும்னு அவரோ, அவரோட ஆதரவாளர்களோ தொடர்ந்து சொல்ல்லாம். கலைஞர் பதவியைத் துறக்க வேண்டியதே இல்லை. கூட்டணி ரெடி!

[அப்போது திடீரென சில ரவுடிகள் உள்ளே நுழைகிறார்கள்!]

ரவுடிகள்:

இப்படிப் பெரிய கட்ஸிகள வாள வெச்சுக்கினே இருந்தா எங்கள மாதிரி பிஸ்கோத்துக் கட்ஸிங்க அல்லா எப்போ வளர்றது?

இந்த மாதிரி விஷயமத்தனமான ஐடியாக் குடுக்கற வெச்சுகிட்டா இங்க்க் கொலை விழும்!

விளம்பர இடைவேளை…!

Related Posts

error: Content is protected !!