செல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்!

செல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்!

ஒவ்வொரு பேரனுக்கும் முதல் காதலி அவன் அப்பாத்தா, ஆச்சி, பாட்டி, அம்மாவை பெத்த கிழ்வின்னு ஒரு வயதான இளவயது மனிதம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அப்படித்தான் எனக்கும் வாய்த்தாள் ஒரு ஆச்சி – செல்லம்மா ஆச்சி. உஜாலா தலை கிராஃபிக்ஸில் போட்டாலும் அவ்வளவு அழகாக போட முடியாத சுருக்கங்கள் நிறைந்த செல்லம்மா ஆச்சி தான் என் தவறுகளுக்கான லேபாராட்ரி த்வளை – குறைந்த மார்க் எடுக்கும் போதெல்லாம் பெற்றோர் அல்லது கார்டியன் என்ற காலத்தின் கையெழுத்து பிராக்ஸி மற்றூம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி கொண்டு போகலாம்.
13 - ravi kozhu
ஒவ்வொரு நவராத்ரியின் போதும் செல்லம்மா ஆச்சியை நினைக்காமல் இருக்க முடியாது. செல்லம்மா ஆச்சி உயிரோடு இருந்த வரை கொலு ரொம்ப ஃபேமஸ். ஸ்கூல் ஆரம்பிச்சி மூன்று மாசத்தில் தொடங்கும் கிருஷண் ஜெயந்தி, பிள்ளையார் சதூர்த்தி, ஆடி அருதி, நவராத்ரி, தீபாவளி, மார்கழி, மஹாசிவராத்ரி,கிருஸ்துமஸ்,பொங்கல்,என ஒவ்வொரு மாதமும் கேலன்டர் நமக்கு அள்ளீ அள்ளி தரும் லீவுகள் கொண்டாட்டங்கள் அனைத்தின் பெரும் பங்களிப்பும் ஆச்சியுடையது தான்.

நவராத்ரி வந்தாலே ஆச்சி யேய் ஏணி கொண்டு வந்து பரணில் இருக்கும் 6 டிரங்கு பெட்டிகளி இறக்கனும்னு சொன்ன உடன் ஆரம்பிக்கும் அக்க போர் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆனால் எனக்கு குதூகலம் தான். இறக்குமதி மொத்த ஏஜன்ட் நான் தான் இறக்கிய உடன் பழைய தினமனி தினந்ததி ஹிந்து என அத்தனை பேப்பரிலும் சுற்றி வைக்கபட்ட மண், பீங்கான், மர பொம்மைகள் ஜூமான்ஞ்ஞி போல உயிர் வரும்.

இதையடுத்து 5 படி வைக்கலாமா 9 படி வைக்கலாமா என ஆரம்பித்து ஹால்ல நடக்க இடம் வேனும் அதனால 7 படி தான் மேக்ஸிமம் என ஹோம் மினிஸ்டர் ஆன அம்மா கார்ப்ரேஷன் அதிகாரி போல அப்ரூவல் கொடுக்க கொலுப்படிகளை இஞ்சினியரிங்க படிக்கமலே வடிவமைப்பேன்.

அதில் முட்டு கொடுக்க செங்கல்ல இருந்து பழைய அலுமினிய சிப்பல்கள் வரை உபயோகிக்கும் ஒரே ஆள் நான் தான். அடுத்து இதற்க்கென்றே இருக்கும் சின்னாளம் பட்டு சேலைகள் அதன் மேல் விரித்து கொலு படி ரெடியாகி பொம்மைகளின் ஹைராக்கியை கரெக்டாய் வைப்பாள் ஆச்சி. இன்று வரை இந்த புரோட்டக்களின் சூட்சமம் தெரிந்ததில்லை. எல்லாம் முடிந்த பின் கை கால் சிதைந்த பொம்மைகள் மற்றும் கல்யாண ஊர்வலம், போலீஸ் அணிவகுப்பு போன்ற பொம்மைகள் எக்ஸ்ட்ராவாய் இருக்கும்

ஒவ்வொரு வருடமும். ஆத்து மண்லை ஒர் டப்பா நிறைய அள்ளி தை கீழே கொட்டி நடுவில் குழியிட்டு தண்ணீர் நிரப்பி அதனை சுற்றீ தனியாவை புதைத்து வைத்து மணலை ஈரமாக்கினால் இரன்டே நாளில் பச்சை பச்சையாய் கொத்தமல்லி முளைக்கும். சில நவதானியங்களும் மிக்ஸ் செய்து அந்த குளத்தை சுற்றி கல்யாண ஊர்வலம் மற்றூம் போலீஸ் பரேடு வீற்றிருக்கும். கீழே கலசம் அதன் நடுவே அம்மன் என தேங்காய்க்கு மஞ்சல் பூசி அழகு செய்து அதற்க்கு ஒரு பட்டு வஸ்த்ரம் என கொலு கொஞ்சம் கொஞ்சமாய் லைவ்லீயாய் இருக்கும்

ராவுத்தர் சவுன்ட் சர்வீஸில் சொல்லி ஒரு சீரியல் செட் வாங்க் வந்த உடனே லைட் எரியாது , உடனே எடிசனாய் ஒவ்வொரு விளக்கையும் டெஸ்ட் செய்து ஃப்யூஸ் ஆகி போன பல்புக்கு பதிலாய் டைனமோவில் இருந்து எடுத்து போட்டு ஒவ்வொரு லைட்டுக்கும் புகையிலை பேப்பர் ராவல்கான் பேப்பர் சுற்றி அதை எரிய வைக்கும் முன் டியூப் லைட் ஸ்டார்ட்டரை எடுத்து பேரலல் ஃபேஸில் கொடுத்தால் மினுக் முனுக் சீரியல் செட்டில் கொலு ஜொலிக்கும்.

அடுத்து என்ன வழக்கம் போல நெய்வேத்யம் என்ற பேரில் ஒவ்வொரு மாலையும் ஒவ்வொரு கேஸ் ஃபாக்டரி தான் – சுண்டல். வெள்ளைக்கொன்டைக்கடலையில் ஆரம்பித்து, கடலைப்பருப்பு சுண்டல் வரை லைட்டா எல்ஜி பெருங்காயம் மற்றூம் கய்ந்த் மிளகாய் வத்தலோடு பிரசாதம்.

இதற்கிடையில் பல வீடுகளிள் இருந்து இனிப்பே இல்லாத சர்க்கரை பொங்கல் வரும். சிலர் பெருங்காயம் தூக்கலாய் புளியோதரை பால் கொழுக்கட்டை, வெல்ல அடை பிரதமன், கஞ்சமாய் பூரணம் வைத்த கொழுக்கட்டைகள், அவல் உப்புமானு புதுபுதுசா வரும். ஒவ்வொரு வீட்டுக்கும் போனா ஒரு டிசம்பர் மாத கச்சேரியில் இடம் கிடைக்காத ஜனகராஜ் வாய்ஸ் ஆன்டிகளுக்கு – என்ன தவம் செய்தனை யசோதான்னு ஆரம்பிச்சி மரி மரி நின்னே முரரிரான்னு பாடுற வரைக்கும் பொறுமையாய் தலையாட்டும் நமக்கு பிரசாதம் கேரன்டி, ஒளியும் ஒலியும் இருக்கு, தூர்தர்ஸ்ன்ல தடங்கலுக்கு வருந்துகிறோம் போர்டை இந்த 10 நாளைக்கு பார்க்க முடியாது ஏன்னா ஒரே பிஸி பிஸி தான் .

நம்ம கொலு ஒரு குடும்பத்தின் ஆளாய் ஆகி காலை மாலை ஒவ்வொரு பொம்மையுடன் பேசி சிரித்து தஞ்சாவூர் தலையாட்டியை சுன்டி விட்டு டெஸ்டிங் செய்து கீழே செட்டியார் கடையின் ஸ்டாக்கை நிரப்பி அப்பா ஒவ்வொரு நாளும் கொலு குதுகல கொலுதான். அடுத்து வரும் ஆயுத பூஜைக்கு நம்ம கையின் அச்சு மற்றூம் படிக்காமல் இருக்கும் அஃபிஷியல் விடுமுறையான சரவஸ்வதி பூஜை புத்தக அடுக்குகள் ஆஹ நினைவுகள் என்றும் பசுமையானவை உங்களுக்குள்ளேயும் ஒரு குழந்தைத்தனம் இந்த கொலுவில் தெரியாமல் போவதில்லை

error: Content is protected !!