காரம் சாரம் நிறைந்த ‘ ஆந்திரா மெஸ்’ மினி ஆல்பம்!

காரம் சாரம் நிறைந்த ‘ ஆந்திரா மெஸ்’ மினி ஆல்பம்!

புதுமுக இயக்குநர் ஜெய் என்பவர் இயக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே இந்த ‘ஆந்திரா மெஸ்’. இதில், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர், பாராதிராஜா இயக்கிய, தெற்கத்தி பொண்னு தொலைக்காட்சி தொடரில் நடித்தவர். இவருடன், ராஜ் பரத், மதி, ஜான் சந்தீப், வினோத், அமர், கஸ்தூரி, பூஜா, சையத் ஆகியோர் நடிக்கிறார்கள்.நிர்மலா கே.பாலா தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக கே.ஆனந்த் பணியாற்றுகிறார். முகேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.

Related Posts

error: Content is protected !!